For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரே ஆண்டில் 128 பெரியார் சிலை: தி.க. முடிவு

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:தமிழகம் முழுவதும் அடுத்த ஆண்டுக்குள் 128 பெரியார் சிலைகளை நிறுவப்போவதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.

ஸ்ரீரங்கம், ரங்கநாதசுவாமி கோவில் ராஜகோபுரம் எதிரே பெரியாரின் முழு உருவச் சிலை நிறுவப்பட்டது. இந்தசிலை கடந்த 8ம் தேதி திறக்கப்படவிருந்தது. ஆனால் அதற்கு முதல் நாள் இரவு சில விஷமிகள் சிலையின்தலையை உடைத்து சேதப்படுத்தினர்.

இதனால் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. பல்வேறு பகுதிகளில் இந்துக் கோவில்கள் தாக்கப்பட்டன.இந்த நிலையில் உடைக்கப்பட்ட பெரியார் சிலைக்குப் பதிலாக புதிய அமர்ந்த நிலையிலான வெண்கலச் சிலைஅதே இடத்தில் வைக்கப்பட்டது.

இந்த சிலையைத் திறப்பதற்கு உச்சநீதிமன்றமும் அனுமதி அளித்தது. இதையடுத்து பெரியார் சிலையைத்திறப்பதற்கான அனைத்துத் தடைகளும் நீங்கின. இதைத் தொடர்ந்து நேற்று மாலை சிலை திறப்பு விழா நடந்தது.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பெரியாரின் சிலையைத் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்ராசா, மாநில அமைச்சர்கள் கே.என்.நேரு, செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கானோர்இந்த சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.

சிலை திறப்பு விழாவையொட்டி திருச்சி மற்றும் ஸ்ரீரங்கத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சிலைதிறப்பு விழாவையொட்டி தாலுகா அலுவலகம் அருகே பொதுக் கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில் வீரமணி பேசுகையில், இந்த நாள் ஒரு பொன்னாள் ஆகும். திராவிட கழக தொண்டன் எப்போதுகருப்புச் சட்டை போட்டானோ அப்போதே அவனது உடலில் பெரியார் ரத்தம் ஓடுகிறது என்றுதான் அர்த்தம்.சிலையைக் காப்போம் என்று கூறி 161 இளைஞர்கள் ரத்தத்தால் கையெழுத்திட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.

கும்பகோணம், சிதம்பரம் போன்ற பல ஊர்களில் கோவில்களுக்கு அருகேதான் பெரியார் சிலைகள் உள்ளன.அதேபோலத்தான் இங்கேயும் கோவிலுக்கு அருகே சிலை வைக்க முடிவு செய்தோம். அப்படிச் செய்தால் இந்தநகரின் புனிதம் கெட்டு விடும் என்றார்கள். உச்சநீதிமன்றமே இப்போது சிலையைத் திறக்கலாம் என கூறிவிட்டது.

கோவில் பக்கத்தில் வைப்பது போல மசூதி அருகிலோ, சர்ச் அருகிலோ வைப்பீர்களா என்று கேட்கிறார்கள்.அயோத்தியில், பாபர் மசூதியை இடிக்க கடப்பாரையை தூக்கியது யார்? நாத்திகர்களா இடித்தார்கள்? இதைஎண்ணிப் பார்க்க வேண்டும்.

இங்கே பெரியார் சிலையைத் தாக்க நடந்த சதித் திட்டம் கோவையில் உருவாகியிருக்கிறது. உண்மையானகுற்றவாளிகள் அங்கேதான் உள்ளனர். எனவே அவர்களை போலீஸார் கைது செய்ய வேண்டும்.

தமிழகத்தில் இப்போது தனித் தமிழர் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அதாவது பெரியார் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. அதனால்தான் நாங்கள் அமைதி காத்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் கடப்பாரைகளைதூக்க மாட்டோம். அதேசமயம், வம்புச் சண்டைக்கு வந்தால் முடிக்காமல் விட மாட்டோம்.

ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலையை இடித்து விட்டார்கள். இதற்காக 128 பெரியார் சிலைகளை தமிழகம் முழுவதும்வைக்கப் போகிறோம். 2007ம் ஆண்டு தொடங்கி 2008ம் ஆண்டில் இது முடிவடையும்.

முதல் சிலை அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் சொந்த ஊரான ஆற்காட்டில் நிறுவப்படும். இதை அவரே நிறுவத்தயாராக உள்ளார். 2வது சிலை அமைச்சர் கே.என்.நேருவின் சொந்த ஊரான லால்குடியில் திறந்து வைக்கப்படும்என்றார் வீரமணி.

முன்னதாக மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு நடந்தது. அந்த மாநாட்டுக்கு தி.க. பொதுச் செயலாளர்கலி.பூங்குன்றன் தலைமை வகித்தார். அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

அரசு அலுவலகங்களில் மதச் சின்னங்கள், சடங்குகள் இடம் பெறக் கூடாது. இதற்கான அரசாணையை தீவிரமாகசெயல்படுத்த வேண்டும்.

மதப் பண்டிகைகளின்போது அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் முன் பணத்தை கல்விப் பருவம்தொடங்கும்போது வழங்க வேண்டும்.

மதக் காரணங்களுக்காக மட்டும் விருப்ப விடுப்பு என்ற நிபந்தனையை நீக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு முற்போக்கு சிந்தனையுள்ள தமிழ்ப் பெயர்களை சூட்ட வேண்டும்.

பாடத் திட்டங்களில் மூடப் பழக்க வழக்கங்களை வளர்க்கும் புராணங்கள், இதிகாசங்களை நீக்க வேண்டும்.

வரலாற்றுப் பாடத்தில் சமூக நீதி குறித்த பாடத்தை இணைக்க வேண்டும். அறிவியலுக்கு முரண்பாடான வாஸ்து,ஜோதிடம் போன்றவற்றை நீக்க வேண்டும்.

ராகிங், பெண்களை கேலி செய்வது போன்றவற்றை ஒழிக்க வேண்டும். குடும்ப வன்முறைச் சட்டத்தைஉறுதியுடன் செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X