For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுனாமி-2: இன்றும் விலகாத இருண்ட நினைவுகள்

By Staff
Google Oneindia Tamil News

கடலூர்:தமிழகத்தை சுனாமி தாக்கி நேற்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்தன. மனதிலிருந்து இன்னும் விலகாத அந்தபயங்கர நாளின் நினைவுகளுடன் கடலூர், நாகை மாவட்ட மீனவர்கள் வழக்கம் போல வாழ்க்கையை தொடர்ந்துகொண்டுள்ளனர்.

2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி. ஆசிய நாடுகள் பலவற்றை ஒரு சில மணி நேரங்களில் புரட்டிப் போட்டுவிட்டுப் போனது ஆழிப்பேரலை எனும் சுனாமி.

அப்படி ஒரு பெயரையே கேள்விப்பட்டிராத மக்களுக்கு சுனாமியின் கோர தாண்டவம் பல காலத்திற்கு மறக்கமுடியாது. மிக வலுவான பீதிச் சுவடுகளை ஏற்படுத்தி விட்டுப் போன சுனாமி.

சுனாமியின் கோரத் தாக்குதலில் சிக்கி கடலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 6,000 பேர் உயி>ழந்தனர். மேலும்நூற்றுக்கணக்கானவர்கள் கடலோடு கரைந்து போய் காணாமலே போனார்கள்.

ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமாயின. சுனாமியின் கோர தாண்டவத்தில் சிக்கி சிதறுண்ட பிறமாவட்டங்கள் நாகை, விழுப்புரம், சென்னை, கன்னியாகுமரி ஆகியவை.

சுனாமி வந்து போய் 2 ஆண்டுகள் முடிந்துவிட்டாலும் இன்னும் அந்த சோக நினைவுகளிலிருந்து இம் மாவட்டகடலோர மக்கள் முழுமையாய் மீளவில்லை என்பதே நிஜம்.

சுனாமிக்கு பெற்றோர், உற்றார், உறவினர்களை இழந்த குழந்தைகளுக்காக கடலூரில் சமூக உதவி மையம்திறக்கப்பட்டுள்ளது. இங்கு சுனாமியால் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்ட 70 குழந்தைகள் தங்கியுள்ளனர்.

சுனாமி தாக்கியபோது 11 மாதமே நிரம்பியிருந்த அபினயா இங்கு சேர்க்கப்பட்டாள். இப்போது அவளுக்குவயது 3. மையத்தில் உள்ள பிற குழந்தைகள்தான் இப்போது அவளது குடும்பம். சுனாமி வந்து போன 3நாட்களுக்குப் பிறகு தேவனாம்பட்டினம் கிராமத்தில் கடலோரத்தில் இருந்த ஒரு முட்புத>லிருந்து மீட்கப்பட்டவள்அபினயா.

அபினயாவின் தாயார் தனவள்ளி, தனது குழந்தையை கடல் அரக்கனிடமிருந்து காப்பாற்றுவதற்காக முட்புதரில்தூக்கி வீசி விட்டு கடலுக்கு இரையாகி விட்டார். அபினயாவின் தந்தை மறு மணம் புரிந்து கொண்டு அரசுகொடுத்த இழப்பீட்டுப் பணத்துடன் அவரது சொந்த ஊரில் போய் செட்டிலாகிவிட்டார். அபினயாவை அவர்வந்து பார்ப்பது கூட இல்லையாம்.

இந்த மையத்தைச் சேர்ந்த ரமணி என்பவர் கூறுகையில், இங்குள்ள குழந்தைகள் மனதில் சுனாமி பயம் போய்விட்டது. அந்தத் துயர நினைவுகளிலிருந்து அவர்கள் விடுபட்டு விட்டார்கள். அதுகுறித்து யாரும் பேசுவதுகிடையாது. தாங்கள் சுனாமியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் என்ற நினைவு கூட அவர்களுக்கு வருவதில்லைஎன்கிறார்.

இந்த மையத்திற்கு அடிக்கடி பல்வேறு தொண்டு நிறுவனத்தினர், நல்லுள்ளம் படைத்தோர் வந்து உதவிகள்செய்வதுண்டாம். அவர்கள் வரும்போதெல்லாம் இந்த குழந்தைகள், அழகாக பாட்டுப் பாடி, நடனம் ஆடிஅவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவார்களாம்.

அடிக்கடி சினிமா பார்ப்பார்களாம். சினிமாவைப் பற்றி தீவிரமாக டிஸ்கஷன் கூட நடக்குமாம். மஞ்சுளா என்ற 8வயது சுட்டிப் பெண்ணுக்குப் பிடித்த நடிகர் ஜெயம் ரவியாம். கண்களில் வெட்கம் தெறிக்கக் கூறுகிறாள் இந்தசிறுமி.

இந்த மையத்திற்கென்று ஒரு வேன் உள்ளது. அதில் வார இறுதி நாட்களில் குழந்தைகளை சுற்றுலாவுக்கும்அழைத்துச் சென்று பல்வேறு இடங்களை சுற்றிக் காட்டுகிறார்களாம்.

இதற்கு நேர் மாறாக இருக்கிறது தேவனாம்பட்டினம் கிராமம். சுனாமியில் அதிகம் பாதிக்கப்பட்டது இந்தக்கிராமம்தான். மீனவ கிராமமான தேவனாம்பட்டினத்தில் இன்னும் சுனாமி சோகம் தலை விரித்தாடுகிறது.

இந்தக் கிராமத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டித் தருவதாக இந்தி நடிகர் விவேக் ஓபராய்கூறியபோது இந்தக் கிராமத்தினர் பெருத்த சந்தோஷம் அடைந்தனர். ஆனால் விளம்பரத்திற்காகத்தான் இவ்வாறுசெய்கிறார் விவேக் ஓபராய் என அதிமுக தலைமை சர்ச்சையைக் கிளப்பி நல்ல மனிதரின் மனதை நோகடித்தது.

இதனால் தனது திட்டத்தை பாதியில் விட்டு விட்டு போய் விட்டார் ஓபராய்.

இந்த அதிருப்தி தேவனாம்பட்டினம் கிராமத்தில் இன்னும் நிலவுவதை பார்க்க முடிகிறது. இங்கு விவேக் ஓபராய்கட்டிக் கொடுத்த தற்காலிக வீடுகள் சிதிலமடைந்து போய்க் காணப்படுகின்றன. இதுதான் விவேக் ஓபராய்எங்களுக்காக கட்டிக் கொடுத்த அரண்மனை என்று தேவராஜ் என்ற மீனவர் வெறுப்புடன் கூறுகிறார்.

எங்களது கிராமத்தைத் தத்தெடுக்கப் போகிறேன், உங்களுக்கு நல்ல வீடுகள் கட்டித் தருவேன் என்பது உள்ளிட்டபல உறுதிமொழிகளை அவர் கொடுத்தார். ஆனால் எல்லாவற்றையும் பாதியில் விட்டு விட்டுப் போய் விட்டார்என்கிறார்.

ஆனால், ஓபராயை பணி செய்ய விடாமல் தடுத்த அதிமுக தலைமைக்கு இதைப் பற்றி கவலையெல்லாம்இருக்கப் போவதில்லை.

சுனாமிக்குப் பிறகு மீனவர்களின் மீன் பிடி வாழ்க்கையும் மாறுதலைக் கண்டுள்ளது. முன்புபோல இப்போதுமீன்கள் அதிகம் கிடைப்பதில்லையாம். அடிக்கடி கடல் கொந்தளிப்பு ஏற்படுவதால் ஆண்டுக்கு 5 மாதம் வரைகடலுக்குள் போக முடியாத நிலை ஏற்படுகிறதாம்.

மஞ்சினி என்பவர் கூறுகையில், இரவு நேரங்களில் நாங்கள் மீன் பிடிக்கப் போவதில்லை. சுனாமி பயம் இன்னும்எங்களை விட்டு அகலவில்லை. முன்பு போல மீன்கள் சரியாக கிடைப்பதில்லை என்கிறார்.

கடலூர் மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பல கிராமங்களில் இன்னும் மீனவர்களுக்கு முழுமையானநிவாரணம் கிடைக்கவில்லையாம். பலருக்கு நிரந்தர வீடுகள் இன்னும் கிடைக்கவில்லை. அரசு வழங்கியநிவாரணத் தொகை கூட ச>வர கைக்கு வரவில்லையாம்.

அப்படியே நிரந்தர வீடுகள் கிடைத்தவர்களுக்கும் கூட அந்த வீடுகள் சரியாக இல்லை என்ற குறை மனதில்உள்ளது. தேவனாம்பட்டினத்தில் 648 வீடுகளை ஒரு தொண்டு நிறுவனம் கட்டிக் கொடுத்தது. ஆனால் அந்தவீடுகள் அதற்குள் சேதமடைந்துள்ளன. சமீபத்தில் பெய்த கன மழையில் இந்த வீடுகளில் நீர் ஒழுக ஆரம்பித்துவிட்டதாம்.

பல வீடுகளின் மேற்கூரைகளில் வெடிப்புகள் காணப்படுகின்றன. கழிவு நீர் வசதியும் சரிவர செய்துதரப்படவில்லை. குடிநீர் வசதியும் ச>யாக இல்லை. இப்படிப் பல குறைபாடுகள் காணப்படுகின்றன.

சுனாமி பாதித்த பகுதிகளில் ஆறுதலைத் தரும் ஒரு விஷயம் என்னவென்றால் நிறைய மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாகியிருப்பதுதான். இதன் மூலம் மீனவப் பெண்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் சுனாமிசோகத்தை மறந்து வாழ்க்கையில் ஒரு பிடிப்புடன் நடை போடத் தொடங்கியுள்ளனர்.

இந்தக் குழுக்களின் முலம் அவர்களின் வாழ்க்கைத் தரமும் ஓரளவுக்கு உயர்ந்துள்ளது. இந்தக் குழுக்கள் மூலம்பொம்மை தயா>ப்பு, மெழுகுவர்த்தி தயா>ப்பு உள்ளிட்டவற்றில் பயிற்சி அளிக்கப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில்உள்ள கடலோரக் கிராமங்களில் மட்டும் 50க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளன.

சுனாமி பேரலைக்கு உறவுகள் பறிபோன பின்பும், இவர்களின் வாழ்க்கைப் படகு நிலை தடுமாறினாலும்சமாளித்துப் போய்க் கொண்டுதான் உள்ளது.

கண்ணீர் அஞ்சலி:

இந் நிலையில் சுனாமியால் பலியானவர்களுக்கு இன்று கடலோரத் தமிழகத்தில் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடலூர் மாவட்டம் தாழங்குடா, தேவனாம்பட்டனம், புதுவை மாநிலம் பீச்சாங்குப்பம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, சென்னை பட்டினப்பாக்கம்,கொட்டிவாக்கம், திருவொற்றியூர் உள்ளிட்ட அனைத்து சுனாமி பாதித்த கடலோரப் பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் மெழுகுவர்த்திகளைஏற்றியும், நினைவுச் சின்னங்களில் மலர் வளையங்கள் வைத்தும், அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சென்னை மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலைக்குப் பின்புறம் சென்னை கவின்கலை கல்லூரி மாணவ, மாணவியர் சுனாமியில் பலியானவர்களின் மணல்சிற்பங்களை உருவாக்கியுள்ளனர். இதைப் பார்த்து பலரும் கண்ணீர் மல்க சுனாமி நினைவுகளை நினைவு கூர்ந்து சென்றவண்ணம் உள்ளனர்.

தமிழகத்தின் பெரும்பாலான கடலோரப் பகுதிகளில் இன்று மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. படகுகள், வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி துக்கம்அனுச>த்து வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X