For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மம்தா பானர்ஜி உடல் நலம் மோசமடைகிறது!

By Staff
Google Oneindia Tamil News

கொல்கத்தா:டாடா கார் நிறுவனத்திற்கு விவசாய நிலம் வழங்கப்படுவதை வாபஸ் பெறக் கோரிகடந்த 23 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்மம்தா பானர்ஜியின் உடல் நிலை மோசமடைகிறது. அவருக்கு ஆக்சிஜன்கொடுக்கப்பட்டு வருகிறது.

Mamtaடாடா நிறுவனம் தனது ரூ. 1 லட்சம் கார் தயாரிப்பு பிரிவை அமைப்பதற்காக மேற்குவங்க மாநிலம் சிங்கூரில் நிலம் கேட்டது. இதைத் தொடர்ந்து சிங்கூர் பகுதிவிவசாயிகளிடமிருந்து 947 ஏக்கர் நிலத்தை மேற்கு வங்க அரசு கையகப்படுத்திஅதை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு வழங்கியது.

விவசாயிகளை கட்டாயப்படுத்தி இந்த நிலத்தை அரசு கையகப்படுத்தியுள்ளதாகமம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார். ஆனால் அப்படிப் பெறவில்லை என்று மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா கூறினார்.

ஆனால் பாதிக்கும் மேற்பட்ட நிலங்களை உரியவர்களின் அனுமதியில்லாமல் அரசுபறித்துள்ளதாக மம்தா கூறுகிறார். பறிக்கப்பட்ட நிலத்தைத் திரும்ப ஒப்படைக்க கோரிசாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை அவர் நடத்தி வருகிறார்.

கடந்த 23 நாட்களாக அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். நேற்று அவரதுநிலை மோசமடைந்தது. மாலையில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.இதையடுத்து அவருக்கு குழாய் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது.

இதுகுறித்து கட்சி பிரமுகர் ஒருவர் கூறுகையில், மம்தா பானர்ஜி நெஞ்சு வலிப்பதாககூறினார். அவருக்கு மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு ஆக்சிஜன்செலுத்தப்பட்டது. அதன் பின்னர் சரியானார் என்றார்.

மம்தாவின் உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வரும் திரிணமூல் கட்சியைச்சேர்ந்த டாக்டர் ககாலி கோஷ் தஸ்திதார், மம்தாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத்தொடர்ந்து ஆக்சிஜன் கொடுக்க உத்தரவிட்டார்.

மம்தாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட்டாலும் அவர் தொடர்ந்து போராட்டத்தைமேற்கொள்வார். சிங்கூர் விவசாயிகளிடமிருந்து கட்டாயப்படுத்தி வாங்கப்பட்டநிலத்தை அரசு திரும்பக் கொடுக்கும் வரை போராட்டம் தொடரும் என்று சட்டசபைஎதிர்க்கட்சித் தலைவர் பார்த்தா சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.

மம்தாவின் உடல் நலம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாகவும், அவரதுஎடையும், நாடித்துடிப்பும் குறைந்து கொண்டு வருவதாகவும் டாக்டர்கள்தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே போராட்டத்தைக் கைவிடும்படி பிரதமர் மன்மோகன் சிங் விடுத்தகோரிக்கையை மம்தா பானர்ஜி நிராகரித்து விட்டது நினைவிருக்கலாம்.

இதற்கிடையே, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நிலத்தைத்திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாதிட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், மம்தா பானர்ஜியுடன்இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த நான் தயார். ஆனால் ரத்தன் டாடாவுக்கு(டாடா குழும தலைவர்) நிலம் தர முடியாது என்று என்னால் கூற முடியாது. இந்தத்திட்டத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை. இந்தத் திட்டம் கண்டிப்பாகநிறைவேற்றப்படும் என்றார்.

சிங்கூர் பிரச்சினையை தேவையில்லாமல் அரசியலாக்கி பொறுப்பில்லாமல்எதிர்க்கட்சிகள் நடந்து கொள்கின்றன என்றும் அவர் கூறினார்.

பாஜக ஆதரவு:

இதற்கிடையே, மம்தாவின் போராட்டத்துக்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது.

நேற்று காலை பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மம்தா பானர்ஜியின் போராட்டம்நியாயமானது. இந்தப் போராட்டத்திற்கு பாஜக மற்றும் தேசிய ஜனநாயகூட்டணி முழுஆதரவு தெரிவிக்கிறது.

இந்தப் பிரச்சினை தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்துபாஜகவின் அவசரக் கூட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது. மம்தாவுக்கு துணை நிற்கபாஜக .டிவு செய்துள்ளது. இதை மம்தாவிட.ம் தெரிவித்தேன்.

இதுதொடர்பாக வாஜ்பாய், அத்வானி ஆகியோருடனும் பேசியுள்ளேன். இந்தப்போராட்டத்தை நாடு தழுவிய போராட்டமாக மாற்ற பாஜக திட்டமிட்டுள்ளது.

மம்தாவுக்கு ஏதாவது நடந்தால் அதற்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மட்டுமேபொறுப்பு. அதற்காக ஒட்டுமொத்த நாட்டின் சாபத்தையும் அவர் சம்பாதிக்க நேரிடும்என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X