For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திய-இலங்கை ரோந்து பாதகமே: கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:இந்திய, இலங்கை கடற்படையினர் கூட்டு ரோந்து செல்ல முடிவெடுத்தால் அது சாதகத்தை விட பாதகத்தையே அதிகம் ஏற்படுத்தும் என முதல்வர்கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் பாணி அறிக்கையில், கூட்டு ரோந்து குறித்த பிரச்சினை நாடாளுமன்றத்தில் திமுகவால் கவனஈர்ப்பு தீர்மானமாக கொண்டு வரப்பட்டது. அதற்குப் பதிலளித்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, இந்திய மீனவர்களின் சட்டப்பூர்வஉரிமைகைளைப் பாதுகாக்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.

இலங்கை அரசுடன் இதுகுறித்து தீவிரமாகப் பேசி வருவதாகவும், இந்திய கடற்படைத் தளபதி, இலங்கை கடற்படை தளபதியுடன் தொடர்புகொண்டிருப்பதாகவும் தரிவித்துள்ளார்.

கூட்டாக ரோந்து என்பது கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், நாம் நினைத்துப் பார்க்கும் சாதகமான விஷயத்தை விட பாதகம்தான் அதிகம் இருக்கும்என்று அனுபவ ரீதியாக உணரப்படுகிறது.

எனவே தவளையும், எலியும் கூட்டுச் சேர்ந்து கால்களைக் கட்டிக் கொண்ட கதையாகி விடக் கூடதே என்ற கவலையுடன் பலரும் இதைகருதுகிறார்கள்.

திமுக அரசின் இலவசத் திட்டங்கள் மீதான விமர்சனம்?

திமுக அரசின் இலவசத் திட்டங்கள் மூலம் இயலாதவர்களுக்குத்தான் பயன்கள் போய்ச் சேருகின்றன. காமராஜர் அறிமுகப்படுத்திய இலவசக்கல்வியிலிருந்து இப்போது நமது ஆட்சியில் நிலமற்ற ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு நிலம் வரையில், இலவசமாக வழங்கப்படுவது சிலஎரிச்சல்காரர்களுக்கு ஆத்திரமூட்டத்தான் செய்யும். அதற்காக நல்ல திட்டங்களை நிறுத்த முடியுமா?

முதல்வர் பதவி கஷ்டமா, இஷ்டமா?

முதல்வர் பதவியில் இருப்பதில் இஷ்டமும் இல்லை, கஷ்டமும் இல்லை. சில நண்பர்கள் எதிர்பார்ப்பதை வழங்க முடியாமையால், நண்பர்கள்எண்ணிக்கையில் நஷ்டம்தான் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X