For Daily Alerts
Just In
ஹைதராபாத்தில் ஒரு அமெரிக்கா:சக மாணவரை துப்பாக்கியால் சுட்ட மாணவர்!
ஹைதராபாத்:ஹைதராபாத்தில், சக மாணவருடன் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்திய பொறியியல் மாணவரை போலீஸார் கைது செய்தனர்.
![]() |
ஹைதராபாத்தில் டெக்கான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி உள்ளது. இங்கு முகம்மது முகரம் அலி சித்திக் என்ற மாணவர் பி.இ. 2வது ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று ஹால் டிக்கெட் வாங்குவதற்காக முகரம் கல்லூரிக்கு வந்தார். அப்போது அங்கு உபைதுல்லா கான் என்ற மாணவருக்கும், முகரத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
![]() |
இருவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று கல்லூரியில் இருவரும் கடும் வாக்குவாதம் செய்தனர். ஒரு கட்டத்தில், ஆத்திரமடைந்த உபைதுல்லா, தன்னிடமிருந்த துப்பாக்கியால், முகரத்தை சரமாரியாக சுட்டார்.
இதில் 6 குண்டுகள் முகரத்தின் வயிற்றில் பாய்ந்து அவர் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த கல்லூரி ஊழியர்களும், மற்ற மாணவர்களும் உபைதுல்லாவை மடக்கிப் பிடித்தனர்.
உடனடியாக முகரம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்க பாணியில் ஹைதராபாத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments
gun துப்பாக்கி அமெரிக்கா மாணவர் polytechnic thatstamil ஹைதராபாத் national india news online hyderabad
Story first published: Sunday, April 22, 2007, 5:30 [IST]