For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எம்.எல்.எம் மோசடி- ரூ.4 கோடி சுருட்டிய பெண்

By Staff
Google Oneindia Tamil News


ஈரோடு:

எம்.எல்.எம் எனப்படும் மல்டி லெவல் மார்கெட்டிங் மூலம் கார், தங்கம் தருவதாக சொல்லி அப்பாவி மக்களை ஏமாற்றி ரூ.4 கோடி வரை சுருட்டிய இளம்பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.

ஈரோடு மாவட்டத்தை அடுத்துள்ள கவுந்தப்பாடியைச் சேர்ந்தவர் இளம்பெண் பகவதி. மல்டி லெவல் மார்கெட்டிங் நடத்தி வந்த இவர் தனது பேச்சுத் திறமையால் கார், பங்களா, தங்க நகைகள் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகளை சொல்லி பலரையும் மல்டி லெவல் மார்கெட்டிங்கில் சேர்த்துள்ளார்.

இவரின் பேச்சுக்கு மயங்கி பிரபு என்பவர் தான் சேர்த்து வைத்திருந்த பணம் ரூ.5 லட்சத்தை கொடுத்து இத்திட்டத்தில் சேர்ந்தார். பிரபு தன்னைப் போலவே திருப்பூரைச் சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் கார்த்திகேயனை சேர்த்து விட்டுள்ளார்.

அவர்களில் வெங்கடேஷ் ரூ.7 லட்சமும், கார்த்திகேயன் 10 லட்ச ரூபாய் கட்டியும் சேர்ந்துள்ளனர். பிரபு இவர்களை பகவதியிடம் சென்று அறிமுகப்படுத்தியுள்ளார். அதற்கு அவர் இந்த திட்டத்தில் சேர்ந்த உங்களுக்கு இன்னும் சில நாட்களில் பணம் டபுளாக கிடைக்கப் போகிறது என்று சொல்லிவிட்டு, பிரபுவை தனியாக அழைத்து நீ இவர்களை சேர்த்து விட்டதற்காக உனக்கு கார், தங்க நகைகள் என்று கிடைக்கும் எனக் கூறியுள்ளார்.

ஆனால் பகவதி கூறியபடி பணமும் இரட்டிப்பாகவில்லை, பிரபுவுக்கு காரும் கிடைக்கவில்லை. அவர்கள் கொடுத்த பணத்தை வாங்கிவிட்டு கம்பி நீட்டி விட்டார் பகவதி. இந்த திட்டத்தில் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிந்ததும், கார்த்திகேயன் மற்றும் வெங்கடேஷ் இருவரும் பிரபுவை மிரட்டி நீ தான் எங்கள் பணத்திற்கு பொறுப்பு. நாங்கள் உன்னை நம்பித்தான் பணத்தை கட்டினோம் என்று கூறியுள்ளனர்.

இதனால் பிரபுவின் வீட்டை எழுதி வாங்கிக் கொண்டதுடன், தொகை நிரப்பப்படாத காசோலைகளையும் வாங்கிச் சென்றுவிட்டனர். இதனால் வெறுத்துப் போன பிரபு, தன்னை மிரட்டி வீட்டை எழுதி வாங்கிச் சென்ற கார்த்திகேயன், வெங்கடேஷ் ஆகியோரிடமிருந்து வீட்டை மீட்டுத் தருமாறும், பகவதியிடம் கட்டிய பணத்தையும் பெற்றுத் தருமாறு கோரி ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இவர்கள் பகவதி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பகவதிக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதாம். இவருக்கும் பெங்களூரை சேர்ந்த ஹரீஸ்குமார் என்பவருக்கும் திருமணமாகி கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்வது தெரிய வந்துள்ளது.

தற்போது தாய் வீட்டில் வசித்து வரும் பகவதி, பல லட்ச ரூபாய் மதிப்பில் கவுந்தப்பாடியில் வீடு ஒன்றை கட்டி வருவதாகவும் போலீசாருக்கு தெரிந்தது.

இதற்கிடையில், பெங்களூர், ஜெய்நகரை சேர்ந்த தொழிலதிபர்
சந்தீப் சீனிவாசன் என்பவர், நானும் பகவதியிடம் ரூ.20 லட்சத்தை கொடுத்து அதோகதியாக இருக்கிறேன். கொடுத்த பணத்தை கேட்டால் அவள் என்னையே மிரட்டுகிறாள்.

பகவதி பெயரில் தனியார் வங்கி ஒன்றில் ரூ.3.8 கோடி ரூபாய் பணம் இருக்கிறது. இதனை நான் ஆதாரங்களுடன் நிரூபிக்கத் தயார். இவருக்கு சில முக்கிய பிரமுகர்கள் ஆதரவு இருப்பதால் தைரியமாக நடமாடி வருகிறார். என்னிடம் நடந்த மோசடி குறித்து நான் புகார் கொடுக்க இருக்கின்றேன் என்று அவர் கூறியுள்ளார்..

பெங்களூரிலும் பகவதி தனது மல்டி லெவல் மார்கெட்டிங்கை நடத்தியிருப்பதால் அவரிடம் மோசடி போனவர்களின் பட்டியில் இன்னும் நீளும் என்று தெரிகிறது.

இவ்வளவு மோசடிகளை செய்துவிட்டு தலைமறைவாக இருக்கும் பகவதியை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X