கூகுளுக்கு கடும் போட்டி தருவோம்-பில் கேட்ஸ்

யாகூவை 1.6 லட்சம் கோடி அளவுக்கு விலைக்குக் கேட்டு வருகிறார் மைக்ரோசாப்ட் அதிபரான கேட்ஸ். ஆனால், இந்த விலை குறைவாக இருப்பதாகக் கூறி விற்க மறுத்து வருகிறது யாகூ.
இந் நிலையில் சியாட்டில் நகரில் ராய்ட்டர் நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,
யாகூவுக்கு மைக்ரோசாப்ட் நிர்ணயித்த விலை மிக நியாயமானது. இன்டர்நெட் சர்ச் விஷயத்தில் கூகுள் மட்டும் தான் இன்று மிக முன்னணியில் உள்ளது. சர்ச்சை அடிப்படையாகக் கொண்ட தொழிலில் கூகுளுடன் போட்டி போட வேண்டுமானால் முதலில் தனது சர்ச் என்ஜினை வலுப்படுத்தியாக வேண்டும்.
அதைச் செய்வதற்கான தொழில்நுட்ப, வர்த்தக பலம் மைக்ரோசாப்டுக்கு உண்டு. அதை யாகூவை வாங்கினாலும் வாங்காவிட்டாலும் செய்து காட்டுவோம்.
அதே நேரத்தில் இந்த விஷயத்தில் வேகமாக களமிறங்க யாகூவை வாங்குவது தான் எளிதான வழி. தனது ெதாழில்நுட்பத் திறத்தால் மிக அருமையான சர்ச் என்ஜினை யாகூ வடிவமைத்து வைத்துள்ளது. அதன் தொழில்நுட்ப வல்லுனர்களுடன் நாங்கள் கைகோர்த்தால் சர்ச் என்ஜின் சார்ந்த வர்த்தகத்தில் பெரும் போட்டியை உருவாக்க முடியும் என்றார்.
இதற்கிடையே யாகூவின் பங்குகளை வாங்க விலையை மைக்ரோசாப்ட் கொஞ்சம் உயர்த்தும் என்று கூறப்படுகிறது. ஒரு பங்குக்கு 31 டாலர் தர முன் வந்துள்ளது மைக்ரோசாப்ட். இதை யாகூ ஏற்க மறுப்பதால் அதை 35 டாலராக உயர்த்த கேட்ஸ் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications