For Daily Alerts
Just In
ராஜ்யசபா தேர்தல்- பார்வையாளர் நரேஷ் குப்தா
சென்னை: தமிழக ராஜ்யசபா எம்.பி. தேர்தலுக்கான தேர்தல் கமிஷன் பார்வையாளராக மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் வரும் 26ம் தேதி நடக்கவுள்ளது. அதற்கான மனு தாக்கல் 8ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடக்கிறது.
மொத்தம் 234 தொகுதி எம்.எல்.ஏ.க்களும் வாக்களிக்கின்றனர்.
அனேகமாக போட்டியின்றி எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பாமக குழப்படி செய்தால் தேர்தல் நடத்த வேண்டிய நிலை உருவாகும்.
தேர்தலின்போது விதிகளை முறையாகப் பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணிப்பதற்காக பார்வையாளராக நரேஷ் குப்தாவை தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது.
மேலும், தமிழக சட்டசபை செயலாளரையே தேர்தல் அதிகாரியாக நியமித்துள்ளதாக தேர்தல் கமிஷன் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.