விவாகரத்து-கணவன் வீட்டு முன் மனைவி உண்ணாவிரதம்
தென்காசி: விவாகரத்து வேண்டாம் என்று கூறி கணவனின் வீட்டு முன் அமர்ந்து மனைவி போராட்டம் நடத்தி வருகிறார்.
தென்காசி அருகே உள்ள ஆய்க்குடி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன். இவருக்கும் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த பிச்சுமணி மகள் மகேஷ்வரியை கடந்த 5 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். திருமணமான இரண்டு வருடத்திலேயே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.
இந்நிலையில் நாராயணன் விவாகரத்து கேட்டு மகேஸ்வரிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அதற்கு மகேஸ்வரி பதில் தெரிவிக்கவில்லை. நீதிமன்றத்திலும் ஆஜராகவில்லை.
இந்நிலையில் தன்னை விவாகரத்து செய்ய வேண்டாம் என்று கூறி கணவன் வீட்டு முன் மகேஸ்வரி இன்று திடீரென உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். வாழ்ந்தால் கணவரோடு வாழ்வேன். இல்லையேனில் இங்கேயே உண்ணாவிரதம் இருந்து உயிரை விடுவேன் என்று மகேஸ்வரி தெரிவித்ததால் உறவினர்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.