For Daily Alerts
Just In
காங்கிரசின் 'ஈ அடிச்சான் காப்பி'-குமாரசாமி கிண்டல்
பெங்களூர்: சுய சிந்தனையே இல்லாமல் திமுக தேர்தல் அறிக்கையை கர்நாடக காங்கிரஸ் காப்பி அடித்துள்ளது என்று கர்நாடக முன்னாள் முதல்வரும் மதச்சார்பற்ற ஜனதாதள மாநிலத் தலைவருமான குமாரசாமி கிண்டலடித்துள்ளார்.
பெங்களூரில் நிருபர்களிடம் அவர் பேசுகையில், கர்நாடக தேர்தலில் வாக்காளர்களை கவர்வதற்காக அவசர கோலத்தில் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2006ல் சட்டசபை தேர்தலின்போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையை அப்படியே கர்நாடக காங்கிரஸார் காப்பியடித்துள்ளனர்.
இலவச டிவி, கிலோ அரிசி ரூ.2 என்று வாக்குறுதிகளை நகல் எடுத்து அறிவித்துள்ளனர்.
திமுகவின் கருப்பு சிவப்பு நிறம்தான் இந்த அறிக்கையில் இல்லை. அதற்கு பதிலாக காங்கிரஸ் வண்ணத்தை பூசியுள்ளனர். சுய சிந்தனையே இல்லாமல் தயாரிக்கப்பட்ட அறிக்கை இது என்று கூறியுள்ளார்.