For Daily Alerts
Just In
18ம் தேதி திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம்
சென்னை: முதல்வர் கருணாநிதி தலைமையில் வருகிற 18ம் தேதி திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் கருணாநிதி தலைமையில் திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் 18ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு, சென்னை அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் கூட்ட அரங்கத்தில் நடைபெறும்.
கூட்டத்தில் சமூக நீதிப் பயணத்தில் நாம் என்ற தலைப்பில் விவாதிக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசின் உயர் கல்வி நிறுனங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்தும், கிரீமி லேயர் விவகாரம் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.