For Daily Alerts
Just In
மழையால் சூரிய காந்தி பூக்கள் நாசம்- விவசாயிகள் கண்ணீர்

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த பலத்த மழையின் காரணமாக புளியங்குடி, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் தங்களது நிலத்தில் கடன் வாங்கி சூரியகாந்தி பூ பயிரிட்டிருந்தனர். ஆனால் இந்த சூரிய காந்தி பூ மழையினால் பெரும் சேதத்தை அடைந்து விவசாயிகளின் வாழ்க்கையை சூனியமாக்கிவிட்டது.
மேலும் சூரியகாந்தி பூ பயிரிட்ட விவசாயிகளூக்கு போதிய நிவாரணம் இன்னும் வழங்கப்படவில்லை. சூரியகாந்தி பூ அழுகியதால் நடுவங்குறிச்சியை சேர்ந்த ராஜா என்ற விவசாயி மாரடைப்பால் பலியாகியுள்ளார். இதுவரை அந்த விவசாயி குடும்பத்திற்கு அரசு சார்பில் நிவாரணமும் வழங்கப்படவில்லையாம்.
விவசாயிகளின் துயர் துடைக்கும் அரசு என்று மார்தட்டும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.