நந்திகிராமில் மீண்டும் பதற்றம்: மம்தா தோழி உள்பட 2 பெண்கள் கற்பழிப்பு
த்னாபூர்: மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமில் மம்தா பானர்ஜியின் தோழி உள்பட நிலமீட்புக்குழுவை சேர்ந்த இரு பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர். இதனால் நந்திகிராமில் மீண்டும் பதட்டம் நிலவுகிறது.
மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க விளைநிலங்களை கையகப்படுத்த மாநில அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து போராடிய கிராம மக்களை கம்யூனிஸ்டு தொண்டர்கள் மூர்க்கமாக தாக்கினர். இதனால் ஏற்பட்ட கலவரத்தில் பலரை போலீசார் சுட்டுக் கொன்றனர். அதன்பிறகு நிலைமை சீரானது.
அதன் பின்னர் அமைதி திரும்பிய நந்திகிராமில், பஞ்சாயத்து தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அங்கு மீண்டும் பரபரப்பு ஏற்பட்ுடள்ளது.
உள்ளூரை சேர்ந்த நில பாதுகாப்பு குழுவினர் மீது கம்யூனிஸ்டு தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர்.
இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவி மம்தா பானர்ஜி தோழி ராதாகிருஷ்ண ஹரி மற்றும் ஒரு பெண்ணை கம்யூனிஸ்டு தொண்டர்கள் சேர்ந்து கற்பழித்ததாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட இருவரையும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
ஆனால் மம்தாவின் தோழி உள்பட இருவரும் கற்பழிக்கப்படவில்ைல என்று போலீஸ் ஐஜி கனோஜியா மறுத்துள்ளார். காயமடைந்த அந்த 2 பெண்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும், இது தொடர்பாக கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
நந்திகிராமில் ஏற்பட்டுள்ள இந்த புதிய பதட்டத்தால் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.