நாளை சங்கரநாராயணர் கோயில் கும்பாபிஷேகம்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் உள்ள அருள்மிகு சங்கர நாராயணர் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ளது அருள்மிகு சங்கரநாராயணர்-கோமதியம்மன் திருக்கோயில். இக்கோயிலில் ஆடித்தபசு, ஹரியும் சிவனும் ஒன்று என்ற தத்துவங்களை உணர்த்தும் விழாக்கள் விசேஷமனவை.
உக்கிரபாண்டிய மன்னரால் கி.பி. 1022ம் ஆண்டில் கட்டப்பட்ட இக்கோயிலின் ராஜகோபுரம் 9 மாடங்கள் கொண்டது. இதன் உயரம் 125 அடியாகும்.
கடந்த 1995ம் ஆண்டு இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தற்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கும்பாபிஷேகம் நடக்கிரது.
இதற்காக ரூ.1 கோடி செலவில் கோயில் திருப்பணிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. யாகசாலை பூஜைகள் கடந்த 20ம் தேதி தொடங்கின.
இக்கோயிலின் கும்பாபிஷேகம் நாளை காலை 5.45 மணிக்கு நடக்கிறது.
செல்வம் பட்டர், சந்திரசேகர சிவச்சாரியார் தலைமையில் 60 ஆச்சாரியர்கள், 100 சிவாச்சாரியர்கள் கும்பாபிஷேம் நடத்துகின்றனர்.
காலை 11 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
பக்தர்களின் வசதிக்காக பல ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகம் செய்துள்ளது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கும்பாபிஷேகத்தையொட்டி நெல்லை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.