சென்னைக்கு தண்ணீர் தர மாட்டோம் - தெலுங்கு அமைப்பு எச்சரிக்கை

திருப்பதியில் இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் டி.ஜி.வெங்கடேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகப் பள்ளிகளில் தெலுங்கு மொழி பேசுவோரின் நலன்கள் புறக்கணிக்கப்படுகின்றன. இந்த நிலை தொடர்ந்தால், தெலுங்கு கங்கைத் திட்டத்தின் கீழ் ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்திற்குத் தர அனுமதிக்க மாட்டோம்.
தமிழகத்தில் 10 சதவீதம் பேர் தெலுங்கு மொழி பேசுகின்றனர். எனவே அவர்களுக்காக தமிழக அரசு தெலுங்கு மொழிப் பள்ளிகளை நடத்த வேண்டும். இல்லாவிட்டால், ராயலசீமாவுடன் தெலுங்கு கங்கை தண்ணீர் நிறுத்தப்படும்.
மத்திய அரசு தெலுங்கு மொழி பேசுவோருக்காக தமிழகத்தில் பள்ளிகள் தொடங்க வேண்டும் என்றார் அவர்.
யார் இந்த வெங்கடேஷ்?
டி.ஜி. வெங்கடேஷ் ஒரு தொழிலதிபர் ஆவார். சந்திரபாபு நாயுடுவின் தீவிர ஆதரவாளர். கர்னூலைச் சேர்ந்த இவர் ராயலசீமாவின் வளர்ச்சிக்காக இந்த அமைப்பை நடத்தி வருகிறார். ஆனால் தெலுங்கானா இயக்கத்தை ஒடுக்கவவே இந்த புதிய அமைப்பை சந்திரபாபு நாயுடுவின் தூண்டுதலின் பேரில் வெங்கடேஷ் நடத்தி வருகிறார் என்ற ஒரு குற்றச்சாட்டும் ஆந்திராவில் உள்ளது.
தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கினால் ராயலசீமாவையும் தனி மாநிலமாக்க வேண்டும் என்பதே வெங்கடேஷின் கோரிக்கை ஆகும்.