சென்னை-அதிமுக நிர்வாகிகளை 'கட்டம் கட்டிய' ஜெ
சென்னை: தென் சென்னை மாவட்ட அதிமுகவில் பலருக்கு 'கட்டம் கட்டியுள்ளார்' அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென் சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி பகுதி அ.தி.மு.க. துணை செயலாளர் தானப்பன் இன்று முதல் அவர் வகித்து வரும் பதவியில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
அதுபோல தென் சென்னை 71வது வட்ட அ.தி.மு.க. செயலாளர் கிருஷ்ணன், 92-வது வட்ட செயலாளர் வாசன், 112-வது வட்ட செயலாளர் சிவராஜ், 134-வது வட்ட செயலாளர் செல்வநாயகம், 86-வது வட்ட செயலாளர் ஆனந்தன், 119-வது வட்ட செயலாளர் சின்னையா, 122-வது வட்ட செயலாளர் முத்து, 126-வது வட்ட செயலாளர் வாசு, 147-வது வட்ட செயலாளர் லோகநாதன், 150-வது வட்ட செயலாளர் ரவி ஆகியோரும் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
ஆயிரம் விளக்கு வடக்கு பகுதி அ.தி.மு.க. அவைத் தலைவராக நுங்கை சீனிவாசன், திருவல்லிக்கேணி பகுதி துணை செயலாளராக சேகர் ஆகியோர் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
அ.தி.மு.கவினர் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.
நீக்கப்பட்டவர்களுக்கு பதிலாக புதிய நிர்வாகிகளையும் ஜெயலலிதா நியமித்துள்ளார்.