
ஊட்டி, கொடக்கானலில் பயணிகள் வெள்ளம்

ஊட்டிக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் ஊட்டியில் உள்ள லாட்ஜ்களில் கட்டணம் தாறுமாறாக உயர்ந்துள்ளது.
சாதாரண நாளில் ரூ.200 என்றிருந்த அறை கட்டணம் தற்போது ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை உயர்ந்துள்ளது. ஹோட்டல்களில் உணவுகளின் விலையும் சாப்பாடே வேண்டாம் என்று கூறும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
ஊட்டியில் உள்ள எந்த ஓட்டலிலும் விலை பட்டியல் வைக்கப்படவில்லை. ஒரே பொருளுக்கு 4 விதமாக விலை கூறுகிறார்கள். உள்ளூர்வாசிக்கு ஒரு விலையும், சுற்றுலா வருவோருக்கு அதைவிட 2 மடங்கு விலையிலும் கொடுக்கின்றனர்.
ஊட்டிக்கு வரும் பயணிகள் பழங்களை விரும்பி வாங்கி சாப்பிடுவார்கள். பயணிகளை கவருவதற்காக பழங்களை பளபளப்பாக வைத்துள்ளனர். அற்காக மெத்தலின் என்ற ரசாயனத்தை பழங்களின் மீது தெளிப்பது தெரிய வந்துள்ளது. இதனால் பலருக்கு வயிற்றுப் போக்கு ஏற்ப்பட்டுள்ளது.
தொடரும் புகார்களை அடுத்து கலெக்டர் ஆனந்த்பாட்டீல் அதிகாரிகளின் அவசர கூட்டத்தை கூட்டினார். இதையடுத்து அமைக்கப்பட்ட கண்காணிக்க ஒரு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.
கொடைக்கானலில்...
அதேபோல கொடைக்கானலில் சீசன் தொடங்கியதை அடுத்து சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஏரியை சுற்றி அலங்காக மின்விளக்குகள், சிறுவர் பூங்கா, நவீன டெலஸ்கோப் ஹவுஸ் உள்பட பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
பெரும்பாலான லாட்ஜ்ககளில் தங்குவதற்கு இடம் கிடைக்காமல் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். பெரும்பாலானோர் முன்பதிவு செய்துள்ளனர். உணவு பொருட்களின் விலையும் அதிகமாகவே உள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
பிரையண்ட் பூங்கா, படகு இல்லம், பில்லர் ராக், பசுமை பள்ளத்தாக்கு, குணா குகை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கூட்டம் அலைமோதுகிறது. படகு சவாரி செய்ய நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர்.
கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்கள் அனைத்தும் வனப்பகுதியை ஒட்டியே உள்ளது. அங்கு செல்லும் சாலைகளும் குறுகலாக உள்ளன. இதனால் வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.