For Daily Alerts
Just In

இலங்கை அம்பாறையில் குண்டு வெடித்து 11 பேர் பலி

இலங்கை கிழக்கு பகுதியில் உள்ள அம்பாறை நகரில் ஒரு ஹோட்டலில் நேற்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த குண்டுவெடிப்புக்கு விடுதலைப்புலிகள் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக இலங்கை ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு அம்பாறை, திரிகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) மாகாண கவுன்சில் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் நிலையில் இந்த சம்பவம் நடந்திருப்பதால் பொதுமக்களுக்கும் இலங்கை அரசுக்கும் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
Comments
Story first published: Saturday, May 10, 2008, 9:58 [IST]