For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூரை கைப்பற்றிய பாஜக-24ல் 14ல் வெற்றி!

By Staff
Google Oneindia Tamil News

Bangalore Hebbal Flyover
பெங்களூர்: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பெங்களூர் நகரில் உள்ள 24 தொகுதிகளில் பாஜக 14 தொகுதிகளை கைப்பற்றி வலுவாக காலூன்றியுள்ளது.

பெங்களூர் நகரில் உள்ள 24 தொகுதிகளில் பாஜக 14 தொகுதிகளிலும், காங்கிரஸ் 9 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற ஜனதாதளம் ஒரு தொகுதியிலும் வென்றுள்ளன. மேலும் 4 தொகுதிகள் கொண்ட பெங்களூர் ஊரக மாவட்டத்திலும் பாஜக 3 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.

கடந்த பொதுத்தேர்தலின்போது பெங்களூர் மாநகராட்சியில் 16 தொகுதிகள் மட்டுமே இருந்தன. அதில் 6 இடங்கள் மட்டுமே பாஜக வசம் இருந்தன.

தொகுதி சீரமைப்புக்குப் பிறகு பெங்களூர் மாநகராட்சி எல்லைக்குள் 24 தொகுதிகள் உருவாகியுள்ளன.

பெங்களூர் நகர்- ஊரக தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம்:

1. எலஹங்கா- விஸ்வநாத் (பாஜக)
2. கிருஷ்ணராஜபுரம்- நந்தீஷ் ரெட்டி (பாஜக)
3. பேட்ராயணபுரம்- கிருஷ்ணபைரே கௌடா (காங்)
4. யஷ்வந்த்பூர்- ஷோபா கரந்தலாஜே (பாஜக)
5. ராஜராஜேஸ்வரி நகர்- சீனிவாசா (பாஜக)
6. தாசரஹள்ளி- எஸ்.முனிராஜா (பாஜக)
7. மகாலட்சுமி லேஅவுட்- நரேந்திர பாபு (காங்)
8. மல்லேஸ்வரம்- அஸ்வத் நாராயணா (பாஜக)
9. ஹெப்பாள்- கட்டா சுப்பிரமணிய நாயுடு (பாஜக)
10. புலிகேசி நகர்- பிரசன்ன குமார் (காங்)- இங்கு அதிமுக வேட்பாளர் அன்பரசன் 1,537 வாக்குகள் பெற்று 5வது இடத்தை பெற்றார்.
11. சர்வஞ்ஞ நகர்- கே.ஜே.ஜார்ஜ் (காங்)
12. சி.வி.ராமன் நகர்- ரகு (பாஜக)
13. சிவாஜி நகர்- ரோஷன் பெய்க் (காங்)- இங்கு அதிமுக வேட்பாளர் யுவராஜ் 429 வாக்குகள் பெற்றார்.
14. சாந்தி நகர்- ஹாரிஸ் (காங்)- இங்கு அதிமுக மாநிலத் தலைவர் புகழேந்தி 1,256 வாக்குகள் பெற்றார்
15. காந்தி நகர்- தினேஷ் குண்டுராவ் (காங்)- இங்கு அதிமுக வேட்பாளர் கிருஷ்ணராஜ் 1,371 வாக்குகள் பெற்றார்.
16. ராஜாஜி நகர்- சுரேஷ் குமார் (பாஜக)- இங்கு அதிமுக வேட்பாளர் ராமசாமி 1,478 வாக்குகள் பெற்றார்.
17. கோவிந்தராஜ் நகர்- சோமண்ணா (பாஜக)
18. விஜய்நகர்- கிருஷ்ணப்பா (காங்)
19. சாம்ராஜ்பேட்டை- ஜமிர் அஹம்மது கான் (மஜத)- இங்கு அதிமுக வேட்பாளர் தெய்வசகாயம் 924 வாக்குகள் பெற்றார்.
20. சிக்பேட்டை- ஹேமந்திரசாகர் (பாஜக)
21. பசவனகுடி- ரவி சுப்ரமணியா (பாஜக)
22. பத்மநாப நகர்- அசோக் (பாஜக)
23. பி.டி.எம். லேஅவுட்- ராமலிங்க ரெட்டி (காங்)
24. ஜெயநகர்- விஜயகுமார் (பாஜக)
25. மஹாதேவபுரா (தனி)- அரவிந்த லிம்பாவளி (பாஜக)
26. பொம்மனஹள்ளி- சதீஷ் ரெட்டி (பாஜக)
27. பெங்களூரு தெற்கு- கிருஷ்ணப்பா (பாஜக)
28. ஆனேகல்(தனி)- நாராயணசாமி (பாஜக)

கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்:

இந்த தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் பதிவான வாக்குகளில் அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சிக்கு 34.6 சதவீதம் கிடைத்துள்ளது. இது, 2004ல் நடந்த தேர்தலில் இந்தக் கட்சி பெற்ற 35.3 சதவீத வாக்குகளைவிட இது 0.7 சதவீதம் குறைவாகும்.

அதே சமயத்தில் தற்போது 33.9 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ள பாஜக, கடந்த தேர்தலைவிட 5.6 சதவீத வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது.

2004 தேர்தலில் 20.8 சதவீத வாக்குகள் பெற்ற மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் வாக்கு வங்கி சிறிதளவு சரிந்துள்ளது. இந்த தேர்தலில் மஜத 19.1 சதவீதம் பெற்றது.

பாஜகவை விட அதிக வாக்குகளைப் பெற்றாலும் அதனால் காங்கிரசுக்கு அதிக இடங்கள் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த தேர்தலைவிட 15 இடங்கள் மட்டுமே காங்கிரசுக்கு கூடுதலாகக் கிடைத்துள்ளது.

மஜத வெற்றி பெற்ற பெரும்பாலான தொகுதிகளில் அதிக வாக்கு வித்தியாசத்துடன் தான் அதன் வேட்பாளர்கள் வென்றுள்ளனர். இதனால்தான் வாக்கு சதவீதம் அதிகமாக இருந்தபோதும் கிடைத்த இடங்கள் குறைந்தன.

இந்த தேர்தலில் அதிமுக போட்டியிட்ட 7 இடங்களில் ஒன்றில்கூட வெற்றி பெறவில்லை.

இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து 'சேஞ்ச் இந்தியா' அமைப்பின் ஆர்.கே. மிஸ்ரா கூறுகையில், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் நாங்கள் ஒரு விஷயத்தை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்த விரும்புகிறோம். கர்நாடக மாநிலம் வளர்ச்சியடைய வேண்டுமென்ற அக்கறை அவர்களுக்கு இருக்குமானால், முதலில் பெங்களூர் நகரை அவர்கள் மேம்படுத்த வேண்டு்ம். மாநிலத்தின் வருவாயில் பெரும்பகுதி பெங்களூர் நகரில் இருந்து கிடைக்கிறது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X