For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எமிரேட்சின் ரூ. 4.5 கோடி டூர்-உலகின் மிக காஸ்ட்லி சுற்றுலா!

By Staff
Google Oneindia Tamil News

Emirates
துபாய்: கையில் நிறைய்யய 'டப்பு' இருக்கா... அப்ப புறப்படுங்க ஐக்கிய அரபு எம்ரேட்ஸூக்கு.

அங்கேதான் உலகின் அதி சொகுசான, எக்கச்சக்க காஸ்ட்லியான சுற்றுலா வசதியை செய்து கொடுக்கிறார்கள். இந்த ஹாலிடே பேக்கஜூக்கு கட்டணம் எவ்வளவு தெரியுமா... ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள். அதாவது சுமார் 4.3 கோடி ரூபாய்!!

அபுதாபியின் எமிரேட்ஸ் பேலஸ் என்ற பிரமாண்ட நட்சத்திர ஓட்டல்தான் இந்த சுற்றுலா திட்டத்தை அறிவித்துள்ளது.

அப்படி என்ன இருக்கு இந்த உலக மகா டூர்ல? என நீங்கள் கேட்பது காதில் விழுகிறது.

இதோ...

அபுதாபிக்கு முதல் வகுப்பு விமான டிக்கெட், எமிரேட் பேலஸ் ஏழு நட்சத்திர ஓட்டலில் சகல வசதிகளுடனும் கூடிய தங்கும் வசதி, ஸ்பா மஸாஜ் சுகம், நீங்கள் விரும்பும் உலகின் காஸ்ட்லி உணவுகள், நட்சத்திர பார், நினைத்த இடத்துக்குப் போய்வர சொகுசு கார்கள்....

அட, ஒரு நடை ஈரானுக்குப் போய் உலகத் தரமான பாரசீகக் கம்பளத்துக்கு ஆர்டர் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் கூட, 'வாங்க கூட்டிட்டுப் போய் வர்றோம்', என்று தயங்காமல் கூறுவார்கள்.

அல்லது ஜோர்டான் நாட்டின் சாக்கடலுக்குப் (Dead Sea) போகச் சொன்னாலும் கூட்டிப் போவார்கள்.

பஹ்ரைன் கடலில் நீங்களே நேரடியாக முத்துக் குளிக்கும் அனுபவத்தைப் பெறவேண்டுமா, அதற்கும் ஏற்பாடு செய்கிறார்கள். அந்தளவுக்கு வசதிகள் நிறைந்த சுற்றுலாப் பிரயாணமாம் இது. பக்கத்து நாடுகளுக்கு பகல் நேரங்களில் விமானத்தில் முதல் வகுப்புப் பயணியாக எண்ணற்ற ட்ரிப்புகள் அடிக்க முடியும்.

ஏழுநாள், ஏழு பகல் தங்கி வளைகுடா நாடுகளின் இந்த முக்கிய நகரையும் அதனைச் சுற்றியுள்ள அழகிய இடங்களையும் பார்த்து அனுபவித்து மகிழலாம்.

சுற்றுலா கட்டணமாக உங்களிடம் வசூலிக்கும் பணத்தில் ஒரு பகுதியை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்குவதாகவும் அறிவித்துள்ளது எமிரேட்ஸ் பேலஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X