திருச்சி: ரேஷன் கார்டு-தவிக்கும் 1000 போலீஸார்
திருச்சி: திருச்சியில் ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பித்த 1,000 போலீசாரை கடந்த முன்று மாதமாக உணவு பொருள் வழங்கல் துறையினர் இழுத்தடித்து வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள போலீசாருக்கு அவரவர் வசிக்கும் பகுதிகளில் உள்ள ரேஷன் கடை மூலம் மானிய விலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய், போன்ற ரேஷன் பொருட்கள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்காக போலீஸாருக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. திருச்சி மாநகர ஆயுதப்படையில் 200 போலீசார், மாநகரில் உள்ள 12 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் பணியாற்றும் போலீசார், 4 மகளிர் பிரிவு, குற்றப்பிரிவுகளில் பணியாற்றும் 400 போலீஸார், யூனிட்டுகளில் பணியாற்றும் 200 போலீஸார் என மொத்தம் 1000 போலீஸார், திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகம் மூலம் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் துறையிடம் தங்களது ரேஷன் கார்டுகளை ஒப்படைத்தனர். புதிய ரேஷன் கார்டுக்கு காத்திருக்கின்றனர்.
இந்த 1000 போலீசாரின் ரேஷன் கார்டுகளை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பெற்றுக் கொண்ட வருவாய்த்துறையினர் இதுவரை அதற்கு மாற்றாக புதிய ரேஷன் கார்டுகளை வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால் திருச்சி போலீசார் ரேஷன் பொருட்களை வாங்க முடியாமல் பரிதவித்து வருகின்றனர். கால தாமததுக்குக் காரணம் தெரியவில்லை.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications