இன்று தேனி செல்கிறார் ஜெ. - நாளை ஆண்டிப்பட்டி விஜயம்
சென்னை: தேனியில் நடைபெறவுள்ள அண்ணா பிறந்த நாள் நூற்றாண்டு பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று மாலை விமானம் மூலம் மதுரை செல்கிறார்.
அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி தேனியில் இன்று அதிமுக சார்பில் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மாலை 3.40 மணியளவில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு புறப்படுகிறார். அங்கிருந்து அவர் ஹெலிகாப்டர் மூலம் தேனி சென்றடைகிறார்.
தனி விமானம் மூலம் ஜெயலலிதா மதுரை செல்வார் எனத் தெரிகிறது. சமீபத்தில் இந்த விமானத்தில் ஏறி ஜெயலலிதாவின் சசிகலா டிரையல் பார்த்தார் என்பது நினைவிருக்கலாம்.
தேனி பொதுக் கூட்டத்தில் இன்று மாலை கலந்து கொள்ளும் ஜெயலலிதா, அண்ணா பிறந்தநாளான நாளை ஆண்டிப்பட்டியில் அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.












Click it and Unblock the Notifications