சட்டம் ஒழுங்கு: காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை
சென்னை: சட்டம்-ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு குறித்த சிறப்பு ஆலோசனை கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று நடந்தது.
தீவிரவாதிகளின் ஹிட் லிஸ்டில் சென்னை மாநகரமும் உள்ளது. சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை கோட்டையில் இன்று சட்டம்-ஒழுங்கு குறித்த சிறப்பு ஆலோசனை கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்தது.
அமைச்சர் துரைமுருகன், தலைமை செயலாளர் ஸ்ரீபதி, உள்துறை செயலாளர் மாலதி, பொதுத்துறை செயலாளர் ஜோதி ஜெகராஜன், தமிழக போலீஸ் டிஜிபி ஜெயின், சென்னை போலீஸ் கமிஷனர் ஆர்.சேகர், புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட், சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி ராஜேந்திரன், புலனாய்வு ஐஜி ஜாபர் சேட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பாதுகாப்பு மற்றும் உள்துறையை பலப்படுத்துவது, சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. காவல் துறை அதிகாரிகளுக்கு முதல்வர் கருணாநிதி ஆலோசனைகளை வழங்கினார்.