குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் கர்ப்பம்-நஷ்டஈடு
மதுரை: குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்ட பெண் மீண்டும் கர்ப்பமானார். இதையடுத்து அவர் தொடர்ந்த வழக்கில், அப் பெண்ணுக்கு நஷ்ட ஈடாக ரூ.50,000 வழங்க மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன், விவசாயி. இவரது மனைவி தேவி (24). இவர்களுக்கு காவ்யா, தேனு என இரண்டு மகள்கள் உள்ளனர்.
இரண்டு குழந்தை போதும் என்று கருதிய தேவி கடந்த 2005ம் ஆண்டு வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்து கொண்டார்.
இந்த நிலையில் மீண்டும் தேவி கர்ப்பமானார். குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்து கொண்ட பிறகும் கர்ப்பமானதால் தேவியும், அவரது கணவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் மன உளச்சல் அடைந்த தேவி நஷ்டஈடு வழங்கக் கோரி உசிலம்பட்டி மருத்துவ அதிகாரி, சுதாதாரப் பணிகள் இணை இயக்குனர், சுகாதாரத் துறை செயலாளர், மாவட்ட கலெக்டர் ஆகியோர் மீது மதுரை முதலாவது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜேக்கப் ஜெயக்குமார், பாதிக்கப்பட்ட தேவிக்கு ரூ.50,000 நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டார்.