For Daily Alerts
Just In
சென்னை-நாகர்கோவில்: தீபாவளி சிறப்பு ரயில் அறிவிப்பு
சென்னை: தீபாவளியை முன்னிட்டு சென்னை-நாகர்கோவிலுக்கு 24 மற்றும் 26ம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
தீபாவளி பண்டிகை இம்மாத இறுதியில் வருவதை முன்னிட்டு சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளதாவது
சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு 24, 26 தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் (.0631) இரவு 7.40 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10.30 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும். இந்த ரயில் பெரம்பூரில் கூடுதலாக நிற்கும்.
மறுமார்க்கம் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு 25, 27 தேதிகளில் இயக்கப்படும். இந்த ரயில் (0632) நாகர்கோவிலில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். இதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.