தங்கம் கிராமுக்கு ரூ.1420 ஆக உயர்வு
மும்பை: தங்கத்தின் விலையிலும் உயர்ந்தது. இன்று பிற்பகல் நிலவரப்படி 10 கிராம் தங்கத்தின் விலை 14,200 ரூபாய். அதாவது கிராமுக்கு ரூ.1420!!
பங்குச் சந்தையில் பங்குகளின் விலை வீழ்ச்சி என்ற செய்தி பரவ ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 கூடிவிட்டது.
பங்குகளை வாங்குவதை விட நிலையான மதிப்பு கொண்ட தங்கத்தில் முதலீடு செய்வது எவ்வளவோ மேல் என்ற எண்ணம் மக்கள் மனதில் பரவியதன் விளைவுதான் தங்கத்தின் விலையை ஏற்றியுள்ளதாக சந்தையில் பேச்சு நிலவுகிறது.
இந்த ஆண்டு இறுதி வரை இதே நிலை நீடித்தால் தங்கம் கிராமுக்கு ரூ.1500 ஆக சுலபத்தில் உயர்ந்துவிடும் என சர்வதேச கோல்டு கவுன்சில் உறுப்பினர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜி-7 நாடுகளின் அதிபர்கள் சர்வதேச பொருளாதார நிலை குறித்து பேசத் துவங்கவுள்ள நிலையில் தங்கத்தின் விலை தாறுமாறாக உயரத் துவங்கியிருக்கிறது.
உலக நாடுகளின் தலைமை வங்கிகள் எடுத்துள்ள பொருளாதார தீரமைப்பு முடிவுகள் பலனற்றுப் போய்விட்டதையே இந்தப் போக்கு உணர்த்துவதாக சர்வதேச பொருளியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.