'வாரே வா'!: இன்னொரு ரூ. 1 லட்சம் கார் ஒரேவா!

அஜந்தா, ஆர்பட் ஆகிய பெயர்களில் கடிகாரம் மற்றும் எலக்ட்ரானிக் வீட்டு உபயோக சாதனங்களை தயாரிக்கும் பிரபல நிறுவனமான அஜந்தா டாடாவுக்கு போட்டியாக கார் தயாரிப்பில் இறங்கவுள்ளது.
சிறிய வடிவிலான எலக்ட்ரிக் கார் குறித்து கடந்த ஆண்டு தனது ஆராய்ச்சியை தொடங்கிய இந்த நிறுவனம் ஒரேவாவை வடிவமைத்துவிட்டது.
ஏற்கனவே மின்சாரத்தால் இயங்கும் இ-பைக்கையும் இந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரேவாவின் விலை ரூ. 85,000 முதல் ரூ.1 லட்சத்துக்குள் இருக்குமாம். இது குறித்து நிறுவனத்தின் தேசிய வர்த்தக தலைவர் ராகேஷ் நத்வானி கூறுகையில்,
நானோ காருடன் நாங்கள் போட்டிப்போடவில்லை. எலக்ட்ரிக் காரை இந்தியாவின் எதிர்கால உற்பத்தியாகவே கருதுகிறோம். இந்த கார் முழுக்க முழுக்க பேட்டரியால் இயங்கக்கூடியது. இந்திய தயாரிப்பு பேட்டரிகளே இதில் பயன்படுத்தப்படுகிறது
என்றார்.
தற்போது இந்திய மார்க்கெட்டில் ரேவா என்ற இ-கார் உள்ளது. எனினும் ஒரேவா விலை, வடிவம் உள்ளிட்ட அம்சங்களில் நானோவுக்கு போட்டியாக இருக்கும் எனத் தெரிகிறது.