முதல் கருப்பர் இன அதிபராக பாரக் ஒபாமா பதவியேற்பு

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சுமார் 25 லட்சம் பேர் திரண்டு வாஷிங்டனில் திரண்டு ஒபாமா பதவியேற்பை கண்டு களித்தனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று சாதனை படைத்தார் பாரக் ஒபாமா. கருப்பர் இனத்தைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்க அதிபர் பதவிக்கு வருவது என்பது கனவாகவே இருந்து வந்த நிலையில் அதை சாதித்துக் காட்டிய ஒபாமாவின் சாதனை, உலக நாடுகளின் கவனத்தைக் கவர்ந்தன.
உலகெங்கும் உள்ள கருப்பர் இன மக்கள் ஒபாமாவின் வெற்றியை தங்களது வெற்றியாகவே கொண்டாடினர்.
இந்த நிலையில், நேற்று தலைநகர் வாஷிங்டனில் பதவியேற்பு விழா நடந்தது.
இதையொட்டி அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுமார் 25 லட்சம் பேர் வாஷிங்டனில் உள்ள நேஷனல் மால் பகுதியில் குவிந்தனர்.
கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல், பதவியேற்பு விழாவைக் காண விடிய விடிய காத்திருந்தனர்.
தேவாலயத்தில் பிரார்த்தனை:
அமெரிக்க நேரப்படி காலை 8 மணியளவில் ஒபாமா பதவியேற்புக்குத் தயாரானார் எட்டே முக்கால் மணியளவில் அவர் தனது மனைவி மிச்சல் ஒபாமாவுடன் கருப்பு நிறக் காரில் ஏறி பழமை வாய்ந்த செயின்ட் ஜான்ஸ் சர்ச்சுக்கு புறப்பட்டார்.
பின்னர் சர்ச்சில் தனிப்பட்ட முறையில் பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
அதை முடித்துக் கொண்ட பின்னர் ஒபாமா தம்பதியினர் பதவி விலகிய அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை சந்திக்க வெள்ளை மாளிகைக்குச் சென்றனர்.
அங்கு வாசலில் நின்று புஷ்ஷும், அவரது மனைவி லாராவும் வரவேற்றனர். லாராவிடம், மிச்செல், பரிசு ஒன்றை அளித்தார்.
பின்னர் நான்கு பேரும் உள்ளே சென்றனர். ஒபாமா தம்பதிக்கு, புஷ் தம்பதி, தேனீர் விருந்தளித்துக் கெளரவித்தனர்.
பின்னர் பதவியேற்பு விழாவுக்காக ஒபாமா, மனைவியுடன் கிளம்பினார். அவர்களுடன் புஷ் தம்பதியும் ஒரே காரில் பயணித்து கேபிடல் ஹில் பகுதிக்கு வந்தனர்.
பதவியேற்புவிழாவில் முன்னாள் அதிபர்கள், ஒபாமாவின் குடும்பத்தினர், ஜார்ஜ் புஷ், லாரா புஷ் மற்றும் குடும்பத்தினர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் வந்திருந்தனர்.
முதலில் ஜோ பிடேன்...:
துணை அதிபரான ஜோ பிடேன் வந்தார். கடைசியாக ஒபாமா வருகை தந்தார். இதையடுத்து பதவியேற்பு நிகழ்ச்சிகள் தொடங்கின.
ஜனநாயகக் கட்சியின் செனட் உறுப்பினரான அரீதா பிராங்க்லின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
பாஸ்டரின் சிறப்புப் பிரார்த்தனையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. இசை நிகழ்ச்சி, பாடல் நிகழ்ச்சி ஆகியவையும் இடை இடையே நடந்தன.
பின்னர் பதவியேற்பு ஆரம்பித்தது. முதலில் துணை அதிபராக ஜோ பிடேன் பதவியேற்றுக் கொண்டார். பைபிள் மீது கை வைத்து அவர் பதவியேற்றார். அவருக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ஜான் பால் ஸ்டீவன்ஸ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
ஒபாமா, ஒபாமா... ஆர்ப்பரித்த கூட்டம்:
பின்னர் ஒரு இசை நிகழ்ச்சி நடந்தது. அப்போது அமெரிக்க நேரப்படி பகல் 12 மணி. அமெரிக்க சட்டப்படி பதவியேற்பு தினத்தின் பகல் 12 மணியளவில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், பதவிப்பிரமாணம் எடுத்திராவிட்டாலும் கூட தானாகவே அதிபர் பதவிக்கு அதிகாரப்பூர்வமாக வந்து விடுவார். எனவே 12 மணியளவில், ஒபாமா பதவியேற்காமலேயே அதிபரானார்.
இசை நிகழ்ச்சி முடிந்தவுடன் பாரக் ஒபாமா அதிபராக பதவியேற்க அழைக்கப்பட்டார். இதையடுத்து கூடியிருந்த லட்சக்கணக்கானோரும், ஒபாமா, ஒபாமா என்று குரல் எழுப்பியபடி உற்சாக குரல் எழுப்பினர்.
பின்னர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ், ஒபாமாவுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
லிங்கன் பயன்படுத்தியல பைபிள்:
1861ல் அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரஹாம் லிங்கன் பதவிப் பிரமாணத்துக்குப் பயன்படுத்திய பைபிளை ஒபாமாவின் மனைவி மிஷெல் எடுத்துத் தர, அதன் மீது தனது இடதுகையை வைத்து வலது கையை உயர்த்தி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
பாரக் ஹுசேன்.. முழுப் பெயரையும் சொன்ன ஒபாமா:
பாரக் ஹுசேன் ஒபாமா என்ற தனது முழுப் பெயரையும் சொல்லி, கடவுளின் பேரால் உறுதிமொழி எடுத்துக் கொண்டார் ஒபாமா. அப்போது மணி 12.06
இதன் மூலம் அமெரிக்காவின் 44வது அதிபரானார் ஒபாமா. மேலும், கருப்பர் இனத்தைச் சேர்ந்த முதல் அதிபர் என்ற வரலாற்றுச் சாதனையையும் அவர் படைத்தார்.
சுமார் ரூ.850 கோடி செலவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்தியத் தூதர் ரொனேன் சென் உள்பட உலகின் பல நாடுகளின் தூதர்களும், பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஒபாமா வாழ்க்கை குறிப்பு:
முழுப் பெயர் - பாரக் ஹுசேன் ஒபாமா.
வயது - 47
பிறந்த நாள் - 1961, ஆகஸ்ட், 4.
பிறந்த இடம் - ஹோனலுலு, ஹவாய்.
படிப்பு - கொலம்பியா பல்கலைக்கழகம், ஹார்வர்ட் சட்ட பள்ளி.
மனைவி - மிச்சல் ராபின்சன் ஒபாமா.
குழந்தைகள் - மலியா (10), சாஷா (7).
மதம் - ஐக்கிய கிறிஸ்தவ சர்ச்.
கட்சி - ஜனநாயகக் கட்சி.
குடும்பம் - கென்ய தந்தைக்கும், வெள்ளையர் இன அமெரிக்க தாய்க்கும் பிறந்தவர் ஒபாமா. தந்தை பாரக் ஒபாமா சீனியர், ஹவாய் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது ஒபாமாவின் தாயான ஆன் துங்காமை மணந்தார்.
ஒபாமா பிறந்த 2 வருடத்திலேயே இருவரும் பிரிந்து விட்டனர். பின்னர் ஒபாமாவின் தந்தை கென்யாவுக்குத் திரும்பி விட்டார். அங்கு தலை சிறந்த பொருளாதார நிபுணராக அவர் விளங்கினார். 1982ம் ஆண்டு கார் விபத்தில் அவர் மரணமடைந்தார்.
ஒபாமாவின் தாயார் ஆன், இந்தோனேசியாவைச் சேர்ந்த லோலோ சொயட்டரோ என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டு இந்தோனேசியாவுக்கு இடம் பெயர்ந்தார். அங்குதான் ஒபாமா தனது 10 வயது வரை வாழ்ந்தார்.
பின்னர் ஹவாய் திரும்பிய அவர் தனது தாத்தா, பாட்டியுடன் வசித்தார்.
ஒபாமாவுக்கு அவரது தந்தையின் பிற திருமணங்கள் மூலம் 7 சகோதர, சகோதரிகள் கென்யாவில் உள்ளனர். அதேபோல அவரது தாயாரின் 2வது திருமணத்தின் மூலம், மாயா சொயோட்டரோ என்ற சகோதரி உள்ளார்.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications