புது டிசைனுக்கு மாறிய யு.எஸ். அரசு வெப்சைட்
வாஷிங்டன்: பாரக் ஒபாமா அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுக் கொண்ட உடனேயே, அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமும் புது டிசைனுக்கு மாற்றப்பட்டு விட்டது.
மாற்றம் என்ற வார்த்தையை ஆயுதமாகக் கொண்டு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவர் ஒபாமா. அவரது பிரசார வெற்றி அரசு மாற்றத்திற்கு வித்திட்டது. அதேபோல, அவர் அதிபராகப் பதவியேற்றவுடன், அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமும் புது வடிவம் பெற்றுள்ளது.
அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ இணையதளம் http://www.whitehouse.gov/ என்பதாகும்.
ஒபாமா அதிபராகப் பதவியேற்றவுடன் வெள்ளை மாளிகை இணையதளத்தின் டிசைனும் புதுப்பிக்கப்பட்டு விட்டது.
இந்த இணையதளத்தில் இடம் பெற்றுள்ள புதிய பகுதி பிரீஃபிங் ரூம் என்பதாகும். இங்கு இணையதளத்தை பயன்படுத்துவோர் சென்று லேட்டஸ்ட் வெள்ளை மாளிகை பிளாக் செய்திகளைப் பார்க்கலாம், இமெயில்களும் அனுப்பலாம். இன்டராக்டிவ் பகுதியாக இது உள்ளது.
தனது தேர்தல் பிரசாரத்தின்போதே, இணையதளத்தின் சக்தி குறித்து விரிவாகப் பேசியிருந்தார் ஒபாமா. அதை அரசியல்வாதிகள் சரியாக பயன்படுத்த வேண்டும் எனவும் கோரியிருந்தார். இன்டர்நெட் மற்றும் அதன் ஆதிக்கம் குறிதது பாசிட்டிவான சிந்தனையுடன் இருப்பவர் ஒபாமா.
வாக்காளர்களுடன் பேசுவதற்காக அவர் பேஸ்புக், யூடியப், பிளாக், விவாத போர்டுகள் உள்ளிட்டவற்றையும் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில்நுட்பப் பிரியராக இருக்கும் ஒபாமா, அதிபரான பின்னர், வெள்ள மாளிகை இணையதளத்தையும் புதிய வடிவுக்கு மாற்றி இன்டர்நெட் மீதான தனது பிரியத்தை நிரூபித்துள்ளார் என்கிறார் கார்ட்னர் ஆய்வு நிறுவன ஆய்வாளர் ஆலன் வெய்னர்.
மேலும் ஒபாமா மட்டுமல்லாமல் அவருடைய ஆலோசகர்களும் கூட இன்டர்நெட் பிரியர்களாகவே உள்ளனர். இது ஒபாமா பதவியில் இருக்கும் வரை தொடரும் என்றும் அவர் கூறுகிறார்.
முன்னாள் அதிபர்கள் குறித்த விரிவான பட்டியல், வெள்ளை மாளிகை குறித்த சுவாரஸ்யமான விவரங்கள், பாரக் ஒபாமா குறித்த விவரங்கள், அவரது பதவியேற்பு விழா பேச்சு, அவரது நிர்வாகத்தில் இடம் பெற்றுள்ளவர்கள் குறித்த விவரங்கள் உள்ளிட்டவை வெள்ளை மாளிகை இணையதளத்தில் நிறைந்துள்ளன.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications