அமெரிக்க வெளியுறவு அமைச்சராக பதவியேற்றார் ஹில்லாரி
வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக ஹிலாரி கிளிண்டன் இன்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டார்.
வாஷிங்டனில் நடந்த விழாவில் ஹிலாரி கிளின்டன் அமெரிக்காவின் 67வது வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்றார்.
அவருக்கு துணை அதிபர் ஜோ பிடன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஹிலாரியின் கணவரான முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், மகள் செல்சியா ஆகியோர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.
அப்போது பிடன் கூறுகையில், கடினமான பொறுப்புக்கு ஹிலாரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதிக அனுபவமும் திறமையும் கொண்ட அவர் தான இப்பதவிக்கு தகுதியான நபர்.
அவர் அமெரிக்காவின் முதல் குடிமகளாக (கிளிண்டனி்ன் மனைவியாக) இருந்த போது 80க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சென்றுள்ளார்.
ஐரோப்பாவின் அதிகார வர்த்தக்கத்தினர் முதல் ஆப்ரிக்காவில் இருக்கும் சிறு கிராமங்களை பற்றி நன்கு அறிந்தவர்.
தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. இப்போது நாம் இரண்டு யுத்தத்தில் பங்கேற்று வருகிறோம்.
அல் கொய்தா தொடர்ந்து சிக்கலை ஏற்படுத்தக்கூடியது. இப்பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்போம் என்றார் பிடன்.












Click it and Unblock the Notifications