For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜை சந்தித்த மகாஜன் மகள்-பீதியில் பாஜக

By Sridhar L
Google Oneindia Tamil News

Poonam
மும்பை: பாஜகவில் சீட் மறுக்கப்பட்ட பின்னணியில், மறைந்த பிரமோத் மகாஜனின் மகள் பூனம் மகாஜன் ராவ், திடீரென மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவை சந்தித்ததால் பாஜக வட்டாரம் குழப்பமாகியுள்ளது. அவர் சுயேச்சையாக போட்டியிடக் கூடும் எனவும் பீதி ஏற்பட்டுள்ளது.

மறைந்த பாஜக இளம் தலைவர் பிரமோத் மகாஜனின் மகள் பூனம் மகாஜன் ராவ். இவர் மும்பை வட கிழக்கு தொகுதியில் போட்டியிட வேண்டி சீட் கேட்டிருந்தார். ஆனால் பாஜக சீட் மறுத்து விட்டது. கிரித் சோமையா என்பவருக்கு சீட் கொடுத்துள்ளது.

இதனால், பிரமோத் மகாஜனின் மைத்துனரும், முன்னாள் துணை முதல்வரும், பூனத்திற்கு சீட் பெறுவதற்காக கடுமையாக முயன்றவருமான கோபிநாத் முண்டே அதிர்ச்சி அடைந்தார்.

இந்த நிலையில், மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரேவை சந்தித்தார் பூனம். அவருக்து மராத்திய புத்தாண்டு தின வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இது பாஜக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் தனது சந்திப்பில் அரசியல் எதுவும் இல்லை என்று பூனம் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த சந்திப்பில் அரசியல் நோக்கம் எதுவும் இல்லை. ராஜ்தாக்கரேயை சந்தித்து அவருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தேன். வேறு எதுவுமில்லை.

நான் பிரமோத் மகாஜனின் மகள். எனவே கட்சிக்கு நான் விசுவாசமாக இருப்பேன். தொண்டராக இருந்து கட்சிக்காக உழைப்பேன் என்றார்.

அதேசமயம், மும்பை வடகிழக்கில் சுயேச்சையாக போட்டியிடப் போகிறார் பூனம் என்று ஒரு தகவல் கூறுகிறது. அதற்கு ராஜ் தாக்கரேவின் ஆதரவை அவர் கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X