சிவகங்கை-ப.சிதம்பரத்துடன் மோதும் ராஜ கண்ணப்பன்

Subscribe to Oneindia Tamil

Kannappan
சிவகங்கை: அதிமுக, ம.த.த., திமுக என இடம் மாறி இப்போது மீண்டும் அதிமுகவில் இணைந்து சிவகங்கை வேட்பாளராகியுள்ளார் ராஜ கண்ணப்பன்.

அதிமுகவின் பீல்டு மார்ஷல் எனக் கூறப்படும் அளவுக்கு ஜெயலலிதாவுக்கு அடுத்த இடத்தில் ஒரு காலத்தில் இருந்தவர் கண்ணப்பன்.

ஆனால் காலப் போக்கில் ஜெயலலிதாவின் நட்பு வட்டத்திலிருந்து விலகி, அதிமுகவிலிருந்தே வெளியேறி தனி ஆவர்த்தனம் நடத்தினார்.

தான் சார்ந்த யாதவா சமூகத்தினரின் வாக்கு வங்கியை இன்னும் கூட ஓரளவு கெட்டியாக வைத்திருக்கிறார் கண்ணப்பன். இதனால் அவரது முக்கியத்துவம் தெரிந்து முன்பு அவரை திமுக இழுத்தது. சமீபத்தில் அதிமுக இழுத்துக் கொண்டது.

அதிமுகவிலிருந்து விலகியவுடன் மக்கள் தமிழ் தேசம் என்ற கட்சியைத் தொடங்கி நடத்தி வந்தார் கண்ணப்பன். பின்னர் அவர் திமுகவுடன் கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு இணைந்தார்.

இளையாங்குடி சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். சமீபத்தில் அப்பதவியை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் அதிமுகவுக்குத் திரும்பினார்.

பி.எஸ்.சி, பி.எல். படித்துள்ள ராஜ கண்ணப்பன், ப.சிதம்பரத்தை எதிர்த்து மோதுகிறார். ஜெயலலிதாவின் ஆஸ்தான எதிரியாக இருப்பவர் ப.சிதம்பரம். எனவே சிதம்பரத்தை வீழ்த்தி சிவகங்கையை ஜெயலலிதாவிடம் ராஜ கண்ணப்பன் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+