அதிமுக வேட்பாளரான ரியல் எஸ்டேட் அதிபர்

Subscribe to Oneindia Tamil

Inbaraj
திருவள்ளூர்: திருவள்ளூர் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இன்பராஜ் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவராவார்.

திருவள்ளூர் மாவட்டம் சென்ராம்பாக்கத்தை சேர்ந்த இன்பராஜூக்கு தற்போது வயது வெறும் 36 தான். தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் குறைந்த வயது கொண்ட வேட்பாளர்களில் இவரும் ஒருவர். இதனால் தொகுதியில் பம்பரம் போல் சுழன்று வேலைகளை செய்து வருகிறார்.

எம்ஏ பட்டதாரியான இவருக்கு முன்னதாக அதிமுக வேட்பாளராக இத்தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட ஆர் ராஜன், தலித் கிறிஸ்தவர். தனி தொகுதிகளில் தலித் கிறிஸ்தவர்கள் போட்டியிட இயலாது என்பதால் அவர் நீக்கப்பட, இன்பராஜூக்கு யோகம் அடித்துள்ளது.

தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் உருவாக்கப்பட்டுள்ள புதிய தொகுதியான திருவள்ளூரில் முதல் வெற்றி அதிமுகவுக்கு தான் என இன்பராஜ் அடித்து சொல்கிறார்.

மண்ணின் மைந்தரான இவர் தற்போது அதிமுக மாவட்ட மாணவரனி அவைத் தலைவராக இருக்கிறார். இவருக்கு தனலெட்சுமி என்ற மனைவியும், ரெக்சனா என்ற மகளும் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+