9000 ஊழியர்களை நீக்கிய ஸ்விஸ் வங்கி!
பெர்ன்: ஒருபக்கம் பொருளாதாரம் மீட்சிக்குத் திரும்புவதாகக் கூறிக் கொண்டிருந்தாலும் மறுபக்கம் வேலைக்குறைப்புகள் இன்னும் தீவிரமாகத் தொடர்கின்றன.
இன்று ஒரே நாளில் உலகில் முன்னணி வங்கியான ஸ்விஸ் வங்கி (United Bank Of Swiss - UBS) மற்றும் முன்னணி விமான நிறுவனண் ஏர்பிரான்ஸ் போன்றவை பெருமளவு ஆட்குறைப்பை அறிவித்துள்ளன.
ஸ்விட்சர்லாந்தின் முதல்நிலை வங்கியான ஸ்விஸ் வங்கி மீண்டும் பணியாளர் குறைப்பை அறிவித்துள்ளது. இம்முறை மேலும் 9000 பணியாளர்களை நீக்குகிறது இந்த வங்கி.
இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 1.75 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டுவிட்டதால் வேறு வழியின்றி 9000 பணியாளர்களைக் குறைப்பதாக ஸ்விஸ் வங்கி அறிவித்துள்ளது.
இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை இத்துடன் நின்றுவிடாது என்றும், 2010க்குள் மேலும் பல ஊழியர் குறைக்கப்படுவார்கள் என்றும் ஸ்விஸ் வங்கி அறிவித்துள்ளது. இப்போது இந்த வங்கியில் 76 ஆயிரம் பேர் பணியில் உள்ளனர்.
ஏர் பிரான்ஸில் 3000 பேர் நீக்கம்!
பிரான்ஸ் நாட்டின் ஏர் பிரான்ஸ் நிறுவனம் 3000 பணியாளர்களை அடுத்த இரு ஆண்டுகளுக்குள் குறைப்பதாக அறிவித்துள்ளது.
இந்த நிறுவனத்தில் ஏற்கெனவே 1000 பணியாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தொடர் நஷ்டம் மற்றும் நிறுவன முடக்கத்தைத் தவிர்க்கவே இந்த நடவடிக்கை என ஏர் பிரான்ஸ் அறிவித்துள்ளது.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications