நில மோசடி- நெல்லை மாவட்டம் முதலிடம்
நெல்லை: கடந்த இரண்டரை ஆண்டுகளில் நெல்லை மாவட்டத்தில் 160 நில மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நில மோசடி தொடர்பான வழக்குகளில் நெல்லை மாவட்டம்தான் தமிழகத்திலேயே முதலிடத்தில் உள்ளது.
இதுகுறித்து நெல்லை மாவட்ட எஸ்பி கூறுகையில் நெல்லை மாவட்டத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் தமிழகத்திலேயே அதிக அளவாக 160 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
100 வழக்குகள் விசாரணை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது. 19 வழக்குகள் முடிக்கப்பட்டு விட்டன. வழக்குகளில் சம்பந்தப்பட்ட 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வழக்குகளில் சம்பந்தப்பட்ட 1500 ஏக்கர் நிலங்கள் மீண்டும் அதன் உரிமையாளர்களிடம் ஓப்படைக்கப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் கங்கைகொண்டான், நாங்குநேரி, ஆகிய பகுதிகளில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமையவுள்ளது.
நான்கு வழி சாலை, காற்றாலை, அணுமின் நிலையம் போன்றவை உள்ளதால் நெல்லை மாவட்டத்தில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் நிலங்களில் மதிப்பு அதிகமாகி வருகிறது.
கடந்த 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு முன்பு குறைந்த விலைக்கு விற்பனை செய்த நிலத்தின் உரிமையாளர்கள் தற்போது விலை உயர்ந்துள்ளதால் தங்கள் நிலத்தை ஏமாற்றி வாங்கி விட்டதாக கூறி கிரயம் வாங்கியவர்கள் மீது விற்பனை செய்தவர்கள் பெய்யான மனுவை கொடுத்து வருகின்றனர். இவ்வாறு மனு கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
நில மோசடியில் ஈடுபடுபவர்கள், அவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். நிலம் வாங்குபவர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றார்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து












Click it and Unblock the Notifications