For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிக்கியது பிரான்ஸ் விமான பாகம் அல்ல-பிரேசில்

By Staff
Google Oneindia Tamil News

Oil slick found in Atlantic ocean
பெர்னான்டோ டி நொரோன்ஹா (பிரேசில்): பிரேசில் நாட்டிலிருந்து கிளம்பி, பாரீஸ் நோக்கி வந்து கொண்டிருந்தபோது அட்லான்டிக் கடல் பகுதியில் திடீரென காணாமல் போன ஏர் பிரான்ஸ் விமானத்தின் உதிரி பாகங்கள், பிரேசில் தீவுப் பகுதியான பெர்னான்டோ டி நொரோன்ஹா என்ற கடல் திட்டுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை பிரேசில் விமானப்படை மறுத்துள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட ஒரு விமான இருக்கை, ஒரு டீசல் பம்ப், 2 மிதவை உடைகள், அவசர கால சாதனம், ஒரு கார்கோ பேலட் ஆகிய பாகங்கள் வேறு விமானத்துக்கு சொந்தமானவை என்றும் விபத்தில் சிக்கிய ஏர் பிரான்ஸ் 447 விமானத்தின் பாகங்கள் அல்ல என்றும் அது விளக்கியுள்ளது.

மேலும் நடுக்கடலில் காணப்படும் எரிபொருள் படலம் அந்த விமானத்திலிருந்து வெளியேறியதல்ல என்றும் அது கப்பலின் எண்ணெய் கசிவாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளது.

விமானத்தின் கருப்புப் பெட்டியும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. கடலுக்கடியில் அது கிடக்கும் என்று கருதி பிரேசில், பிரான்ஸ் நாட்டு விமானப் படை விமானங்களும் கடற்படை கப்பல்களும் அதன் பல ஆயிரம் கடல் பரப்பில் தேடி வருகின்றனர்.

ஆனால் கருப்புப் பெட்டியிலிருந்து வெளியாகும் சமிஞ்கை இதுவரை கிடைக்கவில்லை.

228 பயணிகளுடன் பாரீஸ் நோக்கி வந்து கொண்டிருந்தபோது, ஞாயிற்றுக்கிமை இரவு அட்லான்டிக் கடல் மீது பறந்த நிலையில் இந்த விமானம் காணாமல் போனது.

கிட்டத்தட்ட 36 மணி நேர தேடுதலுக்குப் பின்னர், பிரேசில் அருகில் உள்ள அட்லான்டிக் கடல் தீவுப் பகுதியான பெர்னான்டோ டி நொரோன்ஹோ திட்டுப் பகுதியில் விமான பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் அதை பிரேசில் விமான்படை மறுத்துள்ளது. சம்பந்தப்பட்ட இடத்திலிருந்து ஒரு விமான இருக்கை, ஒரு டீசல் பம்ப், அவசர கால சாதனம், ஒரு கார்கோ பேலட், 2 மிதவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் இவை விபத்தில் சிக்கிய ஏர் பிரான்ஸ் 447 விமானத்தின் பாகங்கள் அல்ல என்று தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து பிரேசில் விமானப்படை தளபதி ரமோன் கார்டோசா கூறுகையில், விபத்தில் சிக்கிய விமானத்திலிருந்து எந்தப் பொருளும் வெளியில் வந்ததாக தெரியவில்லை. உடல்கள் ஏதும் மிதக்கவும் இல்லை. விமானத்தின் சிதறிய பாகங்களும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

தொடர்ந்து நாங்கள் தேடுதல் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் கடல் மேல் பரப்பில் காணப்படும் எண்ணைப் படலம், விபத்தில் சிக்கிய விமானத்தின் எரிபொருளாக இருக்க வாய்ப்பில்லை. காரணம், இவ்வளவு எரிபொருள் ஒரு விமானத்தில் இருக்க வாய்ப்பில்லை. அது ஏதாவது கப்பலில் இருந்து வெளியேறிய படலமாக இருக்கலாம் என்றார் அவர்.

அதி வேகமாக போனதால் விபத்தா..?

இதற்கிடையே நிர்ணயித்த வேகத்தை விட அதி வேகமாக போனதால் விபத்து நேரிட்டிருக்கலாம் என ஒரு தகவலும் வெளியாகியுள்ளது.

இதை உறுதிப்படுத்துவது போல, தங்களது நிறுவன தயாரிப்புகளை இயக்கும் விமானிகள், அதை இயக்குவதற்கான வழிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என ஏர் பஸ் நிறுவனம் திடீரென ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

நேற்று இந்த அறிக்கையை ஏர் பஸ் வெளியிட்டுள்ளது. எரிபொருள் அளவு, டேக் ஆப், டேக் ஆன், போகும் வேகம் ஆகியவற்றில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு முறைகளை முறையாக பின்பற்றுமாறு அது விமானிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

விபத்தில் சிக்கிய விமானத்திலிருந்து கடைசியாக வந்த தானியங்கி செய்தியில், விமானம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வேகமாகப் போனதாகவும் தகவல் உள்ளது.

கருப்புப் பெட்டிக்கு வலை வீச்சு..

இதற்கிடையே, விமானத்தின் கருப்புப் பெட்டி கிடைத்தால் தான் விபத்து எப்படி நடந்தது என்பதை அறிய முடியும் என்பதால் அதைக் கண்டுபிடிக்க இரவு பகலாக விமானங்களும் கப்பல்களும் அட்லாண்டி கடல் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன.

விமானம் விழுந்ததாக சந்தேகப்படும் கடல் பகுதி மிகவும் ஆழமானது என்பதால் கருப்புப் பெட்டிகளை கண்டுபிடிப்பது எளிதான காரியம் அல்ல என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

டைட்டானிக் கப்பலும் இதே கடல் பகுதியில்தான் மூழ்கியது. ஆனால் அது மூழ்கிய இடத்தை விட, தற்போது விமானம் விழுந்த இடம் சற்று ஆழமானது என்பதால் கருப்புப் பெட்டிகளை மீட்பது சவாலான காரியம் என்கிறார்கள்.

கருப்புப் பெட்டிகளை மீட்கும் முயற்சிகளுக்கு அமெரிக்காவின் துணையும் நாடப்பட்டுள்ளது.

ரோபோட்டுகளுடன் கூடிய பிரான்ஸ் நாட்டின் தேடுதல் மற்றும் மீட்புக் கப்பலும் அங்கு விரைந்துள்ளது. இந்த ரோபோட்டுகள், 20 ஆயிரம் அடி ஆழம் வரையிலும் செல்லக்கூடியவை.

கொண்டதாம்.

கருப்புப் பெட்டி என்றால் என்ன..?

கருப்புப் பெட்டியில் இரு பகுதிகள் உண்டு. ஒன்று காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர். இது கடைசி 2 மணி நேரத்திற்கு விமானிகளுக்கும் தரைக்கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையே நடக்கும் உரையாடல்களை பதிவு செய்து வைத்திருக்கும்.

இன்னொரு பகுதியான பிளைட் டேட்டா ரெக்கார்டர் விமானத்தின் வேகம், என்ஜின்கள் செயல்பாடு, விமானத்தின் பிற கருவிகளின் செயல்பாடு, விமானத்துக்குள் உள்ள காற்றழுத்தம் என கிட்டத்தட்ட 400 வகையான பாராமீட்டர்களை பதிவு செய்யும்.

இந்த இரண்டும் இணைந்தது தான் கருப்புப் பெட்டி. இது உண்மையில் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். விமானத்தின் வால் பகுதியில் இது பொறுத்தப்பட்டிருக்கும்.

கருப்புப் பெட்டி 3400 மடங்கு புவி ஈர்ப்பு விசையையும் தாங்கக் கூடியது. விமானம் விபத்துக்குள்ளானால் அதிலிருந்து தொடர்ந்து சமிக்ஞைகள் வந்து கொண்டிருக்கும். கிட்டத்தட்ட 30 நாட்கள் வரை இந்த சமிக்ஞைகள் வரும்.

விபத்துக்குள்ளான ஏர் பிரான்ஸ் விமானத்தில் இருந்த கருப்புப் பெட்டியானது, முற்றிலும் டிஜிட்டல் சாதனங்களை கொண்டதாகும்.

இரு ரெக்கார்டர்களின் எடையும் மொத்தம் 13 பவுண்டுகள் ஆகும். தண்ணீரில் விழுந்தாலும் தீயில் எரிந்தாலும் இதில் உள்ள டேட்டா பாதுகாப்பாக இருக்கும். இதன் சமிஞ்கையை வைத்துத் தான் இதை கண்டுபிடிக்க முடியும்.

ஆனால் நீண்ட காலமாகவே கருப்புப் பெட்டி தண்ணீரில் விழுந்தால் மிதக்கும் தன்மையுடனும், எளிதில் திறக்கக் கூடிய வகையிலும் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடலில் மூழ்கிய கருப்புப் பெட்டிகளை கண்டுபிடிக்க ரேடியோ சிக்னல்களை அனுப்ப முடியாது. காரணம், நீருக்குள் அது வேலை செய்யாது. மாறாக, கடலுக்கு அடியில் உள்ள பொருட்களை கண்டுபிடிக்க அனுப்பப்படும் லொகேட்டார் பீக்கான் எனப்படும் சோனார் அலைகளைக் கொண்ட சிக்னல்களை மட்டுமே அனுப்ப முடியும். அது போய், சம்பந்தப்பட்ட பொருளில் பட்டு பிரதிபலிதித்து ஒலி எழுப்பும். அதன் மூலம்தான் நீரில் மூழ்கிய பொருட்களை கண்டுபிடிக்க முடியும்.

அதேசமயம், கடலில் மிக மிக ஆழமான பகுதிக்குள் சம்பந்தப்பட்ட பொருள் போய் விட்டால், அதை இதுபோன்று சிக்னல் அனுப்பியும் கண்டுபிடிக்க முடியாது.

அட்லான்டிக் கடலில் அதிக அளவில் புயல் வீசும் பகுதியில்தான் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X