For Daily Alerts
Just In
மதுரை-தொழிலதிபர் வீட்டில் 119 பவுன் நகை கொள்ளை!
மதுரை: மதுரையில் தொழிலதிபர் வீட்டில் 118 பவுன் நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
மதுரை எல்லீஸ் நகர் கருமாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த செல்வம் (38) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
இவர் தனது குடும்பத்துடன் ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 119 பவுன் நகைகள் மற்றும் 41,000 ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து எஸ்.எஸ்.காலனி குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.