பிரான்ஸ் தேசிய தினம்-இந்திய வீரர்கள் அணிவகுப்பு

பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பில் இந்திய வீரர்கள் பங்கேற்று நடைபோட்டது இதுவே முதல் முறையாகும்.
அதேபோல இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இன்றைய தின கொண்டாட்டத்தின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய வரலாறு படைத்தார்.
பிரான்ஸ் தேசிய தின நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் முதல் இந்தியப் பிரதமர் சிங்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு இந்தியக் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி பங்கேற்றார் என்பது நினைவிருக்கலாம்.
பிரான்ஸில் நடைபெறும் இதுபோன்ற முக்கிய தேசிய நிகழ்ச்சிகளில் வெளிநாட்டுத் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பது என்பது வழக்கத்தில் இல்லை. அந்த வகையில் மன்மோகன் சிங்குக்குக் கிடைத்த இந்தப் பெருமை இந்தியாவுக்குக் கிடைத்த பெருமையாக கருதப்படுகிறது.
இந்திய வீரர்கள் மிடுக்கு நடை...
இன்றைய தேசிய தின பரேடில், 400 பேர் அடங்கிய இந்திய ராணுவ வீரர்கள் மிடுக்காக அணிவகுத்துச் சென்றனர்.
சாரே ஜஹான் சே அச்சா உள்ளிட்ட பாடல்களை இசை வடிவமாக அவர்கள் ஒலித்தபடி சென்றனர்.
அணிவகுப்பில் முதலாவதாக சென்ற அணி மராத்தா லைட் இன்பேன்டரி பிரிவைச் சேர்ந்த வீரர்கள் ஆவர். இந்தப் பிரிவின் வரலாறு 235 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. உலகின் மிகப் பழமையான படைப் பிரிவு இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ராணுவம் தவிர கடற்படை, விமானப்படைகளைச் சேர்ந்த வீரர்களும் அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications