உடற்பயிற்சியில் மயங்கி விழுந்த சர்கோஸி
Subscribe to Oneindia Tamil
பாரீஸ்: பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி, உடற்பயிற்சி செய்தபோது மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
வெர்சல்ஸில் உள்ள தனது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலுக்கு முன்னதாக உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது மயங்கி விழுந்தார் சர்கோஸி.
உடனடியாக அவரை பாரீஸில் உள்ள ராணுவ மருத்துவமனைக்குக் கொகண்டு சென்றனர். அங்கு இருதயப் பரிசோதனை உள்ளிட்டவை நடத்தப்பட்டன.
சிகிச்சைக்குப் பின்னர் சர்கோஸியின் உடல் நலம் தேறியது. இதையடுத்து அவர் இன்று வீடு திரும்பினார்.












Click it and Unblock the Notifications