அமைச்சர்கள் விடுதலை-எதிர்த்து அதிமுக வழக்கு
மதுரை: சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர்கள், மதுரை முன்னாள் மேயர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அதிமுக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளது. அமைச்சர்கள் மீது மூன்றாம் தரப்பு மனு தாக்கல் செய்யலாமா என்பது குறித்த விசாரணையை முடித்த உயர்நீதிமன்றக் கிளை, உத்தரவை தள்ளி வைத்தது.
அமைச்சர்கள் கோ.சி.மணி, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் ரகுபதி, முன்னாள் மதுரை மேயர் குழந்தைவேலு ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கடந்த அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்குகளை விசாரித்த அந்த அந்த மாவட்ட நீதிமன்றங்கள் அவர்களை வழக்கில் இருந்து விடுதலை செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து அதிமுகசார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
வழக்கிற்கு சம்பந்தமில்லாத இத்தகைய மனுக்களை மூன்றாம் தரப்பினர் தாக்கல் செய்யலாமா என விசாரணை நடைபெற்றது. இதன் மீதான உத்தரவை நீதிபதி செல்வம் தள்ளி வைத்தார்.