For Daily Alerts
Just In
திருப்பூரில் மதிமுக பொதுக் கூட்டத்திற்கு போலீஸ் தடை
திருப்பூர்: திருப்பூரில், மதிமுக பொதுக் கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்து விட்டது.
ம.தி.மு.க. சார்பில் அரிசிக்கடை வீதியில் இன்று பொதுக்கூட்டம் நடத்த சில தினங்களுக்கு முன் போலீசாரிடம் அனுமதி வேண்டப்பட்டது. ஆனால், இந்த பொது கூட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுத்து விட்டது.
மேலும், திருப்பூரில் சட்டம் ஒழுங்கு நிலை பாதிக்கும் சூழ்நிலை தற்போது நிலவி வருவதால், காவல் சட்டம் 30 (2) அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்த அனுமதி மறுக்கப்படுள்ளதாக போலீஸ் தரப்பில் கீகூறப்படுகின்றது.
மதிமுக பொதுக் கூட்டத்திற்கு போலீசார் அனுமதி செயல் கடும் கண்டனத்திற்கு உரியது என மதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் தடையை மீறி பொது கூட்டம் நடத்தவும் ஆலோசனை செய்யப்பட்டு வருகின்றது.
இதனால் திருப்பூரில் பரபரப்பு நிலவுகிறது.