For Daily Alerts
Just In
துணை முதல்வர் ஸ்டாலின் நாளை லண்டன் பயணம்
சென்னை: துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை 10 நாள் இங்கிலாந்துப் பயணத்தைத் தொடங்குகிறார்.
முன்னதாக துணை முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்லவுள்ளதாகவும், அங்கு டெக்ஸாஸ் மாகாணத்தில் கூவம் ஆற்றைப் போல பாழ்பட்டுப் போயிருந்த ஆறு சுத்தப்படுத்தப்பட்டு தற்போது பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டிருப்பதை ஆய்வு செய்யவுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது இங்கிலாந்தில் 10 நாள் பயணத்தை ஸ்டாலின் மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை, சென்னையில் இருந்து விமானம் மூலம் லண்டனுக்கு புறப்பட்டு செல்கிறார் ஸ்டாலின். இங்கிலாந்தில் அவர் 10 நாட்கள் தங்க இருக்கிறார்.
தனது இங்கிலாந்து பயணத்தை முடித்துக் கொண்டு செப்டம்பர் 11-ம் தேதி மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.