Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இஸ்ரேல் உறவை முறிக்க வேண்டும்-யு.எஸ்சுக்கு பின்லேடன் ஆடியோவில் மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

Osama Bin Laden
துபாய்: உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்று பட்டிமன்றமே வைக்கும் அளவுக்கு பெரும் குழப்பமாக உள்ள அல் கொய்தா தலைவர் பின் லேடன் பெயரில் புதிதாக ஒரு ஆடியோ டேப் வெளியாகியுள்ளது. அதில் இஸ்ரேலுடனான உறவுகளை அமெரிக்கா முற்றிலும் துண்டித்துக் கொள்ள வேண்டும் என பின் லேடன் மிரட்டியுள்ளார்.

அமெரிக்க மக்களுக்கு ஒரு அறிக்கை என்ற பெயரில் இந்த ஆடியோ டேப் வெளியாகியுள்ளது.

அல் கொய்தா ஆதரவு இணையதளத்தில் இது வெளியிடப்பட்டுள்ளது.

10 நிமிடம் ஓடும் அந்த ஆடியோவில் அமெரிக்க மக்களை கடுமையாக மிரட்டியுள்ளான் பின் லேடன்.

பின்லேடன் வெளியிட்டுள்ள செய்தி...

இஸ்ரேலுடன் தொடர்ந்து அமெரிக்க அரசு உறவைப் பேணி காப்பது நல்லதல்ல என்பதை அமெரிக்க மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இஸ்ரேலுடனான உறவைத் துண்டித்துக் கொள்வதன் மூலம் தேவையில்லாத பயம் உள்ளிட்டவற்றிலிருந்து உங்களை (அமெரிக்க மக்கள்) நீங்களே விடுவித்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது.

உங்களுக்கும், எங்களுக்கும் உள்ள பிரச்சினைக்குக் காரணமே பாலஸ்தீனத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பதும், நீங்கள் இஸ்ரேலுடன் உறவு வைத்துக் கொண்டிருப்பதுமே ஆகும்.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, முந்தைய புஷ் அரசில் இருந்த ராபர்ட் கேட்ஸை பாதுகாப்பு அமைச்சராக்கியுள்ளார். எனவே அமெரிக்க அரசின் கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

அமெரிக்க வெள்ளை மாளிகையை அழுத்தம் கொடுக்கும் குழுக்கள் ஆக்கிரமித்திருப்பதை நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.

புஷ் கூறியதைப் போல ஈராக்கை விடுவிக்க நீங்கள் போராடியதை விட, வெள்ளை மாளிகையை இந்தக் குழுக்களிடமிருந்து விடுவிக்க நீங்கள் போராடியிருக்க வேண்டும்.

ஆப்கானிஸ்தானில் நீங்கள் சண்டையை நிறுத்தினால் நல்லது. அல்லது அனைத்து முனைகளிலும் எங்களது தாக்குதலை நீங்கள் சந்திக்க நேரிடும்.

அனைத்துப் போர்களையும் நீங்கள் நிறுத்த முன்வந்தால், அதற்குப் பதிலளிக்க நாங்களும் தயாராக இருக்கிறோம்.

வெள்ளை மாளிகையில் முகம் மட்டுமே மாறியுள்ளது. ஒபாமா ஒரு பலவீனமான மனிதர். போரை நிறுத்தக் கூடிய தைரியமும், திறமையும் அவரிடம் இல்லை.

அமெரிக்காவுக்கு எதிரான புதிய துவேஷ விதைகளை ஒபாமாவும், அவரது அரசும் தூவியுள்ளன. இதற்கான அறுவைடையை சந்திக்க அமெரிக்கர்கள் தயாராக வேண்டும் என்று கூறியுள்ளார் பின் லேடன்.

ஆடியோவில் இடம் பெற்றிருப்பது பின் லேடனுடைய குரல்தானா என்பது உறுதி செய்யப்படவில்லை.

சில நாட்களுக்கு முன்பு இதே இணையதளம், முஸ்லீம்களுக்கு பின் லேடனிடமிருந்து ரம்ஜான் பரிசு வரப் போகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது பின் லேடனின் ஆடியோ வெளியாகியுள்ளது. நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதல் தினமான செப்டம்பர் 11ம் தேதி பின் லேடன் ஆடியோ அல்லது வீடியோ வெளியாகக் கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஆடியோ வெளியாகியுள்ளது.

இந்த ஆடியோ டேப்பில், கெய்ரோவில் ஒபாமா பேசியதை மேற்கோள் காட்டியுள்ளது. எனவே அதற்குப் பின்னர்தான் இந்த ஆடியோ பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+