For Daily Alerts
Just In
பெரியார் 131வது பிறந்த தினம் - கருணாநிதி, ஜெ. அஞ்சலி

தந்தை பெரியாரின் 131வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது.
இதையடுத்து இன்று காலை சென்னை சிந்தாதரிப்பேட்டை பகுதியில் உள்ள பெரியார் சிலைக்குச் சென்ற முதல்வர் கருணாநிதி, அதற்குக் கீழ் வைக்கப்பட்டிருந்த புகைப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
கொடநாடு எஸ்ட்டேடில் ஓய்வெடுத்து வரும் ஜெயலலிதா, அங்கு பெரியார் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
தேமுதிக தலைமைக் கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பெரியார் படத்துக்கு கட்சித் தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பெரியார் படத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் தங்கபாலு, சுதர்சனம், உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தோர், தி.க.வினர் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.