ஒபாமா கருப்பர் என்பதால் இனவெறி- கார்ட்டர்

84 வயதாகும் கார்ட்டர் இதுகுறித்து என்பிசி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், அதிபர் ஒபாமாவுக்கு எதிராக சமீப காலமாக எழுந்து வரும் கோபங்கள், விமர்சனங்களுக்குப் பின்னால் இனவெறி இருப்பதாக நான் நினைக்கிறேன்.
ஒபாமா ஒரு கருப்பர் என்பதால், அவர் ஆப்பிரிக்க-அமெரிக்கர் என்பதால் இந்த துவேஷம் எழுந்திருப்பதாக நான் உணர்கிறேன்.
நான் (அமெரிக்காவின்) தெற்கிலிருந்து வந்தவன். இத்தனை ஆண்டுகளில் தெற்கு பெரும் வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. ஆனால் இனவெறி அங்கு இன்னும் மிச்சம் உள்ளது. இங்குள்ள வெள்ளையர்களிடம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அமெரிக்க வெள்ளையர்கள் மத்தியிலும், கருப்பர்களால், ஆப்பிரிக்க அமெரிக்கர்களால் நாட்டுக்குத் தலைமை தாங்க முடியாது என்ற நம்பிக்கை மனதுக்குள் ஆழ ஊடுறுவியுள்ளது.
தற்போது ஒபாமா அந்தப் பதவிக்கு வந்துள்ளதை அவர்களால் தாங்க முடியவில்லை. இந்த எண்ணம் இன்னும் மறையாமல் இருப்பது எனக்கு வருத்தம் தருகிறது, கவலையை ஏற்படுத்துகிறது என்றார் கார்ட்டர்.
சில நாட்களுக்கு முன்பு அதிபர் ஒபாமா ஒரு கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது குடியரசுக் கட்சி எம்.பி. ஜோ வில்சன், நீங்கள் பொய் சொல்கிறீர்கள் என்று சத்தமாக கத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதேபோல வாஷிங்டனில் ஒபாமா அரசின் கொள்கைகளை கண்டித்து ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். இவர்கள் அனைவருமே வெள்ளை அமெரிக்கர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜிம்மி கார்ட்டரின் பேச்சு அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications