For Daily Alerts
Just In
செங்கோட்டை-ஈரோடு ரயிலை இயக்க கோரி உண்ணாவிரதம்
சங்ரகன்கோவில்: செங்கோட்டை-ஈரோடு ரயிலை இயக்க கோரி சங்கரன்கோவிலில் இன்று உண்ணாவிரதம் நடக்கிறது.
சங்கரன்கோவில் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த செங்கோட்டை-ஈரோடு ரயில் இயக்கப்படும் என மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது. ஆனால் அது இன்று வரை இயக்கப்படாமல் இருந்து வருகிறது.
இந்த ரயிலை விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சங்கரன்கோவிலில் இன்று புதிய பார்வை அமைப்பின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.
பயணியர் விடுதி முன்பு நடக்கும் போராட்டத்திற்கு அமைப்பின் தலைவர் மாரியப்பன் தலைமை வகிக்கிறார்.
போராட்டத்தை தென்காசி தொகுதி எம்பி லிங்கம் துவக்கி வைக்கிறார். இசக்கி, வெள்ளையன், தில்லையம்பலம், சுப்பையா, ஹரிஹரன், அப்துல்ரசாக், சந்திரசேகரன், முத்துகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.