For Daily Alerts
Just In
ஒரே மாதத்தில் 4 போலீஸார் அடுத்தடுத்து மரணம் - பீதி
நெல்லை: நெல்லை ஜங்ஷன் பாலம் காவல் நிலையத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் மரணமடைந்துள்ளனர். இது போலீசார் மத்தியில் பீதியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை சிந்துபூந்துறை செல்வியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரமோகன். ஜங்ஷன் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்த இவர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். நேற்று அவர் இறந்தார். அவரது உடலுக்கு போலீசார் அஞ்சலி செலுத்தினர்.
ஜங்ஷன் காவல் நிலையத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் அடுத்தடுத்து இறந்துள்ளது போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.