புதிய தலிபான் தலைவர் ஹக்கீமுல்லா மசூத்தும் பலி - அமெரிக்கா
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலிபான் அமைப்பின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹக்கீமுல்லா மசூத்தும் பல வாரங்களுக்கு முன்பே சக தீவிரவாதிகளால் கொல்லப்பட்டு விட்டதாக அமெரிக்க உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலிபான் தலைவர் பைதுல்லா மசூத் அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி கொல்லப்பட்டார். இதை முதலில் தலிபான்கள் மறுத்து வந்தனர். பின்னர் மசூத் கொல்லப்பட்டது உறுதியானது.
இதையடுத்து புதிய தலைவராக ஹக்கீமுல்லா மசூத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் தற்போது அவரும் கொல்லப்பட்டு விட்டதாக அமெரிக்க உளவுத் தகவல்கள் கூறுகின்றன.
இதுகுறித்து அமெரிக்க உளவுப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், பல வாரங்களுக்கு முன்பு தலிபான் தீவிரவாதிகளுக்குள் நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் ஹக்கீமுல்லா மசூத் கொல்லப்பட்டுள்ளார். இது கிட்டத்தட்ட உறுதியானது.
இருப்பினும் இந்த செய்தியை தலிபான்கள் தரப்பில் உறுதி செய்யாமல் உள்ளனர். இந்த செய்தியை அவர்களாகவே உறுதிப்படுத்தினால்தான் உண்டு. இருப்பினும் ஹக்கீமுல்லா உயிரிழந்திருக்கிறார் என்பதை நாங்கள் முழுமையாக நம்புகிறோம் என்றார்.
தெற்கு வசிரிஸ்தானில் நடந்த துப்பாக்கிச் சண்டையில்தான் ஹக்கீமுல்லா கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் நடந்த அமெரிக்க ராக்கெட் வீச்சில் ஹக்கீமுல்லாவின் தம்பி கொல்லப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications