சோனியா காந்திக்கு 64வது பிறந்தநாள்

ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மூத்த அமைச்சர்களும், காங்கிரஸ் தலைவர்களும் சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
திமுக அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
கருணாநிதி வாழ்த்து:
முதல்வர் கருணாநிதி அனுப்பியுள்ள வாழ்த்தில்,
'உங்களுடைய எளிமையான வாழ்க்கையும், குறிக்கோளை அடைய நீங்கள் எடுக்கும் தீவிர முயற்சிகள் போன்றவை நாட்டு மக்களை மிகவும் கவர்ந்துள்ளது. நீங்கள் நீண்ட நாள் மகிழ்ச்சியோடு வாழவும், உங்களால் இந்தியா நீண்ட காலம் நன்மைகள் பெறவும் தமிழ்நாட்டு மக்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
தடபுடலான கொண்டாட்டங்கள் தவிர்த்து அமைதியாக வாழ்த்துக்களை பெற்றுக் கொள்ளும் சோனியாவை பற்றிய சில தனிப்பட்ட தகவல்கள்:
சோனியா சமையல் செய்வதில் மிகவும் ஆர்வமுள்ளவர். திருமணமான புதிதில், மாமியார் இந்திராவுக்காக பல புத்தகங்களையும் படித்து வாய்ப்பு கிடைக்கும் போது, வித்தியாசமான 'டிஷ்'களை தந்து அசத்துவாராம்.
தனது அறையை தானே சுத்தம் செய்யும் பழக்கம் அவரிடம் எப்போதும் இருக்கிறதாம். வீடு சுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டுவாராம்.
நன்றாக வரையவும் செய்வார் சோனியா. தேசிய மாடர்ன் ஆர்ட் கேலரியில் இவரின் ஓவிய படைப்பும் இடம பெற்றுள்ளது.
தினமும் யோகா செய்யும் பழக்கமுள்ள சோனியா, மிகவும் விரும்பி அருந்துது காபியாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications