பென்னாகரம் சோதனைச் சாவடிகளில் ஜெ., ஸ்டாலின் வேன்களில் சோதனை
பென்னாகரம்: பென்னாகரம் தொகுதியி்ல் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரது வேன்களை நிறுத்தி போலீஸார் சோதனை போட்டனர்.
சமீபத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் காரும் இதுபோல சோதனையிடப்பட்டது. இதுகுறித்து பாமக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா ஆகியோரின் கார்களில் சோதனை நடத்தப்பட்டது.
பென்னாகரம் மலை கிராமங்களில் நேற்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்தார். வழியில் நாகர்கூடல் என்ற கிராமத்துக்கு செல்லும்போது அங்கிருந்த வாகன சோதனை சாவடி அருகே ஸ்டாலின் பிரசார வேன் நிறுத்தப்பட்டது.
பென்னாகரம் தொகுதிக்கு வந்து செல்லும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட வேண்டும் என்ற தேர்தல் கமிஷன் உத்தரவின் பேரில் ஸ்டாலின் பிரசார வேனும் நிறுத்தி சோதனை செய்யப்பட்டது.
சேலம் சரக டி.ஐ.ஜி.வெங்கட்ராமன் தலைமையில் போலீசார் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசார வேனுக்குள் சென்று சோதனை நடத்தினர். சோதனை செய்வதற்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தாராளமாக சோதனை செய்து கொள்ளுங்கள் என்று கூறி விட்டார். சுமார் 10 நிமிடம் இந்த சோதனை நீடித்தது.
இதேபோல, அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா நேற்று பென்னாகரம் தொகுதியில் தனது பிரசாரத்தை தெர்டங்கினார். குரும்பட்டி கூட்டு ரோட்டில் அவர் முதலில் பிரசாரம் செய்து விட்டு இண்டூரில் பிரசாரம் செய்வதற்காக வேனில் சென்றார்.
அவரது வேன் இண்டூர் அருகே பூட்டுகாரன் தோப்பு சோதனை சாவடிக்கு வந்த போது போலீசார் அவரது வேனை தடுத்து நிறுத்தி சோதனை போட வேண்டும் என்று கூறினார்கள்.
இந்த தகவலை கருப்பு பூனை படையினர் ஜெயலலிதாவிடம் கூறினார்கள். ஜெயலலிதாவும் தாராளமாக சோதனை செய்து கொள்ளட்டும் என்று கூறினார். அதனைத் தொடர்ந்து போலீசார் ஜெயலலிதாவின் வேன் கதவை திறந்து சோதனை செய்தனர். அது 5 நிமிட நேரம் நடந்தது. இந்த நிகழ்வை தேர்தல் கமிஷன் நியமித்துள்ள வீடியோ காமிராமேன் வீடியோவில் படம் எடுத்து பதிவு செய்தார். பின்னர் வாகனம் செல்ல அனுமதிக்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications